தற்கொலைக்கு முயன்றாரா மதுமிதா? இது தான் இன்றைய ப்ரோமோவின் தாமதத்திற்கு காரணமா.!

0
13320
Madhumitha
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் தற்போது ஆண்கள் அணி பெண்கள் அணி என்று இரண்டு குழுவாக பிரிந்து ஏகப்பட்ட பிரச்சனை ஓடிக்கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக மதுமிதாவின் பிரச்சனை தான் மும்மரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சேரனை தவிர மற்ற அணைத்து ஆண்களும் மதுமிதாவிற்கு எதிராக இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இன்றைய நிகழ்ச்சியில் தர்ஷன் மற்றும் மதுமிதா இருவரையும் அழைத்து என்ன பிரச்சனை என்று கேட்டுக்கொண்டிருந்தார் சேரன்.ஆரம்பத்தில் அமைதியாக பேசிக்கொண்டு இருந்த தர்ஷன் மற்றும் மதுமிதா இருவரிடையில் வாக்கு வாதம் முற்றி பின்னர் அது மிகப்பெரிய சண்டையாக வெடித்தது.

இதையும் பாருங்க : வனிதா அடுத்த வாரமும் தொடருவாரா.! அதற்கான ஆதாரங்கள் இவை தான்.! 

- Advertisement -

மதுமிதாவின் மீது தொடர்ந்து ஆண்கள் அணியினர் குற்றம் சாட்டி வந்ததால் நேற்று மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மதுமிதா வெளியேற்ற பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதே போல தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மமுகென் வனிதாவை அறைந்துவிட்டதாகவும் இதனால் அவரை ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், பின்னர் அது பொய்யான தகவல் என்று தெரியவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement