பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய பிக் பாஸ் மஹத்.! இந்த ரகசியம் தெரியுமா..?

0
931
Mahat

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சர்ச்சைக்குறிய போட்டியாளர்களின் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் மஹத். சக போட்டியாளரான சென்றாயன், பாலாஜி ஆகியோர்களிடம் வாயை கொடுத்து வம்பிழுத்து வரும் மஹத் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு நடிகர் ஒருவரிடம் தர்ம அடி வாங்கியுள்ளார்.

Mahat-kamal

நடிகர் மஹத், சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை டாப்ஸியை காதலித்து வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம் தான். இந்த விடயத்தை சில நாட்களுக்கு முன்னர் நடிகர் மஹத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சில் தெரிவித்திருந்தார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னரே இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் நடிகர் மஹத்தை தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் என்பவர் ஒரு பார்ட்டியில் அடித்ததாகவும் , கொலை மிரட்டல் விடுத்தாகவும், நடிகர் மஹாத் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இதற்கு பிண்ணனி என்னவெனில் நடிகர் மஹத் மற்றும் நடிகை டாப்ஸிக்கு இடையேயான காதல் முடிவிற்கு பின்னர் நடிகை டாப்ஸி , தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜுடம் நெருக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

Manchu manoj

மேலும்,இவர்கள் இருவரும் ஒன்றாக தங்கி வந்துள்ளனர் அதனால் நடிகர் மஹத் ஒரு பார்ட்டியில் மஞ்சு மனோஜை சந்தித்த போது தனது முன்னாள் காதலியான டாப்ஸியுடன் பழகுவதை குறித்து நடிகர் மஞ்சு மனோஜுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டபோது அது சண்டையில் முடிந்து நடிகர் மஞ்சு மனோஜ் , மஹத்தை தர்ம அடி அடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.