நேற்று (ஜூலை 8)ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடி பல கேள்விகளையும் கேட்டார் . அப்போது போட்டியாளர்களை ஆண், பெண் என்று இரு குழுக்களாக பிரித்து அவர்களிடம் பிக் பாஸ் வீட்டை பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டது.
பிக் பாஸ் வீட்டை நன்றாக புரிந்து வைத்து கொண்டிருப்பது ஆண்களா, பெண்களா என்பதற்காக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அறைகள், ஜன்னல்கள், நார்காலிகள் போன்றவற்றை பற்றியெல்லாம் நடிகர் கமல் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்டிருந்தார். அப்போது பெண்கள் அறையில் உள்ள போர்வையின் நிறம் என்ன என்று கேட்டார்.
அப்போது அனைவரும் பிங்க், ப்ளூ என்று பல பதில்களை கொடுத்தனர். அப்போது நடிகர் கமல், ஆண்களும் இதற்கு பதில் சொல்லலாம் , மஹத், நீங்கள் சொல்லலாமே. நீங்கள் சொல்லுங்கள் ‘ என்றார். உடனே மற் போட்டியாளர்களும் மஹத் சொல்லுங்கள் என்று கூற துவங்கினார். இதனால் பார்வையாளர்கள் அனைவரும் சிரிக்க துவங்கினர், மஹத்தும் வெட்கத்துடன் “பிங்க் அண்ட் கோல்ட் ” என்று தப்பாக பதிலளித்தார்.
பிக் பாஸ் வீட்டில் மஹத் பெரும்பாலும் பெண்கள் இருக்கும் படுக்கை அறையில் தான் இருந்து வருகிறார். ஏற்கனவே பெண்கள் அறையில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகியோருக்கு இடையில் நடிகர் மஹத் படுக்கையில் படுத்து இருக்கிறார். இதையெல்லாம் மனதில் வைத்தே கமல் மஹத்திடம் இந்த கேள்விக்கு பதில் கேட்டுள்ளார் என்று நன்றாகவே தெரிந்தது.