என் Girl Friend பத்தி யார் பேசுனது..! பொன்னம்பலத்தை கேவலமான வார்த்தையால் திட்டிய மஹத்.!

0
176
Mahat-big-boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘உன்னை போல் ஒருவன்’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர் கதாபாத்திரமாக மாறி, அவர்களை போன்றே நடை, உடை, பாவனை அனைத்தையும் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.இந்த டாஸ்கில் ரெட் டீம், ப்ளூ டீம் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சில தனிப்பட்ட டாஸ்க்குகளும் கொடுப்பட்டது.

Mahat-big-boss

இந்த டாஸ்கின் போது மஹத் கதாபாத்திரத்தில் இருந்த பொன்னம்பலம், அனைத்து கேமரா முன்பும் சென்று ‘போ போ ஐ லவ் யூ ‘ என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அதனை கேட்டுக்க கொண்டிருந்த மஹத், மிகவும் கோவமுடன் டேனியிடம் , அவர் என்னுடைய காதலி பற்றி தான் பேசுகிறார், டாஸ்க் முடியட்டும் அப்புறம் பாரு’ என்று கூறுகிறார்.

பின்னர் சிறுது நேரம் கழித்து அணைத்து போட்டியாளர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், மஹத் மிகவும் கோபமடைந்து ‘என்னுடைய காதலி பத்தியோ, பர்சனல் பத்தியோ எந்த நாயும் பேச வேணாம் ‘ என்று பொன்னம்மபலத்தை மறைமமுகமாக திட்டினார். இதனை கேட்டுக்கொண்டிருந்த டாஸ்கின் நடுவர் ரித்விகா ‘யாரும், யாருடைய தனிப்பட்ட லைஃப் பத்தியோ, பெமலி பத்தியோ, லவ்வர் பத்தியோ பேச வேண்டாம் ‘ என்று சமாதானம் செய்தார். அதன் பின்னரே மஹத் சற்று அமைதியானார்.

Ponnambalam

ஆனால், உண்மையில் யாஷிகாதான் பொன்னம்பலத்திடம், மஹத் அவருடைய காதலியை ‘போ போ’ என்று தான் அழைப்பார் அதை மட்டும் சொல்லுங்க என்று கூறியிருந்தார். அதன் பின்னர்தான் பொன்னம்பலம் அணைத்து கேமரா முன்பும் சென்று ‘ஐ லவ் யூ போ போ ‘ என்று சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால், மஹத்தோ, வயது வித்யாசம் பார்க்காமல் பொன்னம்மபலத்தை ‘நாய் ‘ என்று திட்டியுள்ளது ஏற்புடையதாக தோன்றவில்லை.

அதுமட்டுமல்லாமல் மஹத் எப்போதுமே பெண்களுக்குத்தான் ஆதரவாக இருந்து வருகிறார். அதிலும் யாஷிகா என்ன தவறு செய்தாலும் அவரிடம் மஹத் வழிந்து கொண்டு ஓடுகிறார். உண்மையில் பொன்னம்பலத்திற்கு, மஹதின் காதலியுடைய செல்ல பெயரை கூறியது யாஷிகாதான். ஆனால், அவரை விடுத்து பொன்னம்மபலத்தை தரக்குறைவாக மஹத் திட்டியது எந்த விதத்தில் நியாயம் என்று தான் தெரியவில்லை.