செருப்பு பிஞ்சிடும்..! மோசமாக திட்டிய மஹத்..! யாரை தெரியுமா..?

0
357
Bigg-Boss-Mahat

பிக் பாஸ் வீட்டில் அதிகம் புறம் பேசுகிறார் என்று வைஷ்ணவி மீது சக போட்டியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் மஹதிற்கும், வைஷ்ணவிக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கூட மஹத், வைஷ்ணவியை முகத்திற்கு பின்னல் திட்டினார்.

balaji

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு எல்லோ டீம், ப்ளூ டீம் என்று இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் எல்லோ அணியில் வைஷ்ணவி, பாலாஜி, மும்தாஜ், ரித்விகா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் எல்லோ டீமில் இருக்கும் யாராவது ஒரு பலவீனமான போட்டியாளருக்கு பதிலாக சிறையில் இருக்கும் மஹத்தை மாற்றம் செய்து கொள்ளலாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். ஆனால், மஹத்தை அணியில் சேர்த்துக்கொள்ள வேன்டும் என்றால் அவருக்கு பதிலாக அந்த பலவீனமான போட்டியாளரை சிறையில் அடைக்க வேண்டும் என்று அறிவிக்கபட்டது. அப்போது பாலாஜி தானாக முன்வந்து நான் சிறையில் செல்கிறேன் என்று கை தூக்கினார்.

Mahat

ஆனால், சிறையில் இருந்த மஹத் ‘ அதெல்லாம் முடியாது வைஷ்ணவி தான் வரணும்னு, நீ வராத செருப்படி விழும் ‘என்று பாலாஜியை சத்தம் போட்டார். ஆனால்,மஹத் சொன்னதை பாலாஜி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இதனால் இறுதியில் பாலாஜி தான் மஹதிற்கு பதிலாக சிறைக்கு சென்றார். ஆனால், பாலாஜி சிறைக்கு வந்தது மஹத்திற்கு கஷ்டம் இல்லை, வைஷ்ணவி சிறைக்கு வரவில்லை என்று தான் மஹத் புலம்பி கொண்டிருந்தார்.

Balaji-bigg-boss

ஏற்கனவே பாலாஜிக்கும், மஹத்திற்கும் மிக பெரிய வாக்கு வாதம் ஒன்று நடைபெற்றது. அதில் மஹத், பாலாஜியை வயது வித்யாசம் பார்க்காமல் ‘வாடா போடா’ என்றெல்லாம் திட்டி விட்டு, பின்னர் காலில் விழாத குறையாக மன்னிப்பும் கேட்டார். அதன் பின்னர் இவர்கள் இருவரும் சமாதானம் ஆகி விட்டனர். அதே போல சமீபத்தில் சிறையில் இருந்த மஹத்திற்கு களி உணவாக அளிக்கப்பட்டது. அதனை பார்த்த பாலாஜி கண்கலங்கி மஹத்திற்கு ஆறுதல் கூறினார். ஆனால்,இவற்றையெல்லாம் மறந்து மீண்டும் மஹத், பாலாஜியை வயது வித்யாசம் பார்க்காமல் இப்படி திட்டியுள்ளது ரசிகர்களிடேயே மஹத் மீதான வெறுப்பை மேலும் அதிகரித்துள்ளது.