ஹரிஷ் கல்யாண், ஆர்த்தியை தொடர்ந்து சம்பளத்தை குறைத்து கொண்ட பிக் பாஸ் நடிகர்.

0
923
- Advertisement -

கொரோனாவினால் உலகமே திண்டாடி கொண்டு இருக்கிறது. கொரோனாவின் கோரத்தாண்டவம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்து உள்ளார்கள். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல பேர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அதே போல கொரோனா பாதிப்பால் திரையுலகமும் பெரிதும் பாதித்துள்ளது. சினிமாவை நம்பி இருக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் தற்போது வேலை இல்லாததால் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு திரைப்பட சங்கம் நிதி திரட்டி உதவி செய்து வருகிறது. இவர்களை போலவே பணம் போட்டு தயாரித்த படங்கள் வெளிவராததால் தயாரிப்பாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இதனால் பல்வேறு நடிகர் நடிகைகளும், இசையமைப்பாளர்களும், இயக்குனர்களும் இனி வரும் சில மாதங்களுக்கு தங்களது சம்பளத்தை குறைத்துகொள்வதாக அறிவிப்பை வெளியிட்டனர். அதில் நடிகர் ஹரிஷ் கல்யாண், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, இயக்குனர் ஹரி, நடிகை ஆர்த்தி என்று பலரும் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் மஹத்தும் தனது சம்பளத்தை எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்துக்கொள்ள தயார் என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் 10 வருசமா சினிமாவில் இருக்கேன். இப்போ தான் இரண்டு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறேன். தற்போது இந்த கொரோனா பாதிப்பால் முக்கியமாக தயாரிப்பாளர்கள், விநியோகியோஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என்று இவர்கள் மூவர் தான் அதிகம் பாதிக்கபட்டுளேன்.

-விளம்பரம்-

எனவே, அவர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்து என்னுடைய சம்பளத்தில் எவ்வளவு குறைக்க முடிவெடுத்தாலும் அதற்கு நான் தயார். அது 20 % என்றாலும் 50 % என்றாலும் இல்லை 70% குறைத்தாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மஹத். இந்த அறிவிப்பால் இவருக்கும் பட வாய்ப்புகள் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement