விஜய் சாரை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவேன். புது மாப்பிள்ளையான பிரபல நடிகர் பேட்டி.

0
13210
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இளையதளபதி விஜய். இவருடன் நடித்த நடிகர் நடிகைகள் அனைவருமே இவர் குறித்து புகழ்ந்து தள்ளி உள்ளதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். இந்த நிலையில் பிரபல நடிகரும் புது மாப்பிள்ளையுமான மஹத், விஜய் தனது திருமணத்தில் இல்லாதது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். தமிழில் பெரும்பாலும் சிம்புவின் படத்தில் நடித்துள்ள மகத் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-1.jpg

- Advertisement -

நடிகர் மகத் அவர்கள் முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடித்த வல்லவன் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு 2007 ஆம் ஆண்டு காளை என்ற திரைப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் மூலம் தான் மகத் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் மோகன்லால் மற்றும் தளபதி விஜய் நடித்த ஜில்லா திரைப் படத்தின் தான் மூலம் மகத் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்ட பல்வேறு பிரபலமான நடிகர்களில் நடிகர் மற்றும் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஆக்ரோஷமான போட்டியாளராக இருந்த மஹத் பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். நிச்சயதார்த்தம் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆனா நிலையில் மஹத் மற்றும் பிராச்சி திருமணம் கடந்த வியாழக்கிழமை ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்றது.

-விளம்பரம்-

வீடியோவில் 14:35 நிமிடத்தில் பார்க்கவும்

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மஹத், விஜய் தனது திருமணத்தில் இல்லாதது குறித்து வருத்தப்பட்டுள்ளார். என்னுடைய திருமணத்திற்கு எனக்கு நெருங்கிய சில நபர்களை மட்டும் தான் அழைத்தேன். எனக்கு மிகவும் பிடித்தது விஜய் அண்ணா தான். அவரை என் திருமணத்திற்கு அழைக்க முயற்சித்தேன். ஆனால், அவர் கொஞ்சம் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்திருந்தார். கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவேன். அவர் இருந்திருந்தால் சந்தோசமாக இருந்திருப்பேன் என்று கூறியுள்ளார் மஹத்.

Advertisement