போலி கணக்கில் இருந்து மீரா செய்த பித்தலாட்டம்.. இறுதியில் வசமா மாட்டிகிட்டாரே..

0
47431
meera
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தவர்தான் நடிகை மீரா மிதுன். மாடல் அழகியான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் என்ற அழகி பட்டத்தையும் பெற்றிருந்தார். ஆனால், இவர் மீது தொடரப்பட்ட பல்வேறு மோசடி வழக்கு காரணமாக அந்த பட்டம் இவரிடம் இருந்து பறிக்கப்பட்டு பின்னர் அதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி இடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் நான் தான் இன்னமும் 2016ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா அழகி என்றும், அந்தப் படம் இன்னமும் என்னிடம் தான் இருக்கிறது என்றும் கூறிவருகிறார்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீராமிதுன் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் கலந்து கொண்ட நாள் முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். மேலும், பாஸ் வீட்டில் இருந்த அபிராமி மற்றும் சாக்ஷி இருவருமே இவரை தொடர்ந்து டார்கெட் செய்து வந்தார்கள். அதேபோல பிக் பாஸ் வீட்டில் மீரா மிதுன் சேரன் குறித்து கூறிய சர்ச்சையான கருத்தினால் இவர் மீது ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே மீராமிதுன், பிக்பாஸ் குறித்தும் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இதையும் பாருங்க : 96 படத்தில் நான் தான் நடிப்பதாக இருந்தது.. இப்போது புலம்பும் நடிகை..

எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நேரம் இது தனது அன்றாட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார் ஆனால் கடந்த சில நாட்களாக இவர் தினமும் ஏதாவது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் அதேபோல மீரா மீது எனக்கு ஆதரவாக ட்ரீட் போடும் நபர்களில் பதிவுகளை மீரா மிதுன் ரீட்வீட் செய்து தனக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை தண்டோரா போட்டு அறிவித்த வண்ணம் இருந்துவருகிறார் ஆனால் உண்மையில் இவருக்கு ரசிகர்கள் இல்லை என்பதுதான் உண்மை

-விளம்பரம்-

கடந்த சில நாட்களாகவே கவுல் பிராமின் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து மீராவின் புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது மேலும், அந்த குறிப்பிட்ட கணக்கிலிருந்து ட்வீட் செய்யபட்ட அடுத்த கணமே அதனை மீரா மிதுன் லைக் செய்துவிடுவார். மேலும், அந்த கணக்கில் இருந்து பெரும்பாலும் மீரா மிதுனை புகழும் பதிவுகளும் வரும் இதனால் அந்த கணக்கையும் மீரா மிதுன் தான் பயன்படுத்தி வருகிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வந்திருந்தனர். ஆனால் கவுல் பிராமின் என்ற அந்த குறிப்பிட்ட கணக்கை பயன்படுத்தும் நபரோ, இது என்னுடைய கணக்கு, தான் மீரா மிதுனுக்கு ஆதரவாக பதிவிடுகிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இருப்பினும் அவர் பதிவிடும் பதிவுகள் மீரா மிதுனுக்கு ஆதரவாக இருந்து வந்ததால் ரசிகர்களுக்கு அந்த சந்தேகம் நீங்கவில்லை.

மேலும், மீரா மிதுன் எங்கே சென்றாலும் என்ன செய்தாலும் அவரை பெருமையாக கூறும் வகையில் கவுல் பிராமின் ட்விட்டர் கணக்கில் இருந்து தொடர்ந்து பதிவுகள் வந்துகொண்டே இருந்தது. இந்தநிலையில் மீரா மிதுன் நடுரோட்டில் நாய்களுக்கு உணவு அளிக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த புகைப்படத்தில் மீரா மிதுன் னுக்கு நான் என்றால் மிகவும் பிடிக்கும் மேலும் அவரது செல்லப்பிராணி நாய் தான் என்று குறிப்பிட்டிருந்தார் மீரா மிதுன். இந்த பதிவை கண்ட ரசிகர்கள் மீராமிதுன் தான் விளம்பரத்திற்காக கவுல் பிராமின் என்ற நபரின் கணக்கை இத்தனை நாட்கள் பயன்படுத்தி வந்துள்ளார் என்பதை உறுதி செய்தனர். அதற்கு முக்கிய காரணமே மீரா மிதுன் அந்த கணக்கில் குறிப்பிடவேண்டிய கேப்ஷனை மாறாக தன்னுடைய பீட்டர் பக்கத்திலேயே பதிவிட்டு விட்டார். இதனால் நெட்டிசன்கள் மீரா மிதுன் போலியான ஒரு கணக்கை வைத்துக்கொண்டு தன்னை விளம்பரம் செய்துகொள்ள இத்தனை நாட்கள் பித்தலாட்டம் செய்து வருவதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement