அடேங்கப்பா, ஷிவானி துவங்கி நயன்தாரா வரை மொத்தம் 14 பெயர்களை வெளியிட்ட மீரா.

0
1596
meera
- Advertisement -

சமூக வலைதளத்தில் கடந்த சில வாரமாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.நிகழ்ச்சியில் இருந்தபோது சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளி விட்டார் என்று இவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும்இவர் டுவிட்டரில் அடிக்கடி சரியான விஷயங்களை பதிவிட்டு வந்தார்.

-விளம்பரம்-

அதிலும் கடந்த சில வாரமாக ஹோலிவுட்டு மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா.கடந்த சில நாட்களாக டிவிட்டரில் எந்த பதிவையும் போடாமல் இருந்த மீரா, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் . அதில் தான் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கமுடியவில்லை என்றும் தான் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு சென்றுள்ளதாகவும் கூறி கண்ணீர் மல்க கதறி இருந்தார் மீரா.

இதையும் பாருங்க : ரியோ பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னீங்க ஆரி பிறந்தநாளுக்கு ஏன் சொல்ல – ரசிகர் கேள்விக்கு அனிதா விளக்கம்.

- Advertisement -

அதே போல பல நடிகைகள் தன்னுடைய முகத்தையும், தான் அணியும் உடையையும் காப்பி அடித்து வருகிறார்கள் என்று அடித்துவிடும் மீரா மிதுன் சமீபத்தில் லாஸ்லியாவும் தன்னுடைய முகத்தையும், உடையையும் காப்பி அடித்துள்ளதாக தான் பேஷன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற புகைப்படத்தையும் லாஸ்லியா நடத்திய போட்டோ ஷூட் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த லாஸ்லியாவின் ரசிகர்கள் மீரா மிதுனை திட்டி தீர்த்து வருகின்றனர்.

மேலும் தன்னுடைய முகத்தை திருடி பிரபலத்தை ஏற்படுத்திக் கொள்ளும் அனைத்து நபர்கள் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தன் முகத்தை பயன்படுத்தும் நடிகைகளின் பெயரை விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருந்த மீரா மிதுன் தற்போது அந்த பெயர்களையும் வெளியிட்டுள்ளார். அதில் ரம்யா பாண்டியன், யாஷிகா, சாக்ஷி சிவானி, அபிராமி, ஐஸ்வர்யா தத்தா, பிரியா பவானி சங்கர், வாணிபோஜன், லாஸ்லியா, கீர்த்தி சுரேஷ், திரிஷா, நயன்தாரா, மாளவிகா, ஸ்ருதிஹாசன் என்று பலரது பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement