ரியோ பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னீங்க ஆரி பிறந்தநாளுக்கு ஏன் சொல்ல – ரசிகர் கேள்விக்கு அனிதா விளக்கம்.

0
1602
anitha

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

ஆரி, பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை இவருக்கு ஆதரவாக இருந்தது சனம் மற்றும் அனிதா தான். அவ்வளவு ஏன் ஆரி டைட்டில் வின்னர் ஆன போது கூட சனம் மற்றும் அனிதா தான் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். . சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய போது மக்கள் பலரும் சனம் ஷெட்டி வெளியேறியது நியாயமே இல்லை என்று கருத்து தெரிவித்தனர். சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ஆரி மற்றும் அனிதாவிடம் தான் நெருக்கமாக இருந்து வந்தார்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது கூட ஆரி பற்றி தான் பெருமையாக பேசி இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்ன தனது பிறந்தநாளை கொண்டாடிஇருந்தார் . அதற்கு சனம் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு ஆரியும் நன்றி தெரிவித்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரியோவின் பிறந்தநாளுக்கு அனிதா சம்பத் வாழ்த்துக்கள் தெரிவித்ததாகவும். ஆனால், ஆரியின் பிறந்தநாளுக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் ரசிகர் ஒருவர் அனிதாவிடம் கேட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள அனிதா, நான் ஆரிக்கும் விஷ் பண்ணேன் என்னோட profile-ல பாருங்க. ட்விட்டர்லையும் விஷ் பண்ணேன் ஆரிக்கு. இன்டர்நெட் ஸ்லோவா இருந்ததால அது அப்லோட் ஆகல. ரொம்ப லேட்டா அப்லோட் ஆயிச்சினு அப்புறம் டெலீட் பண்ணிட்டேன். ஆனால், இன்ஸ்டாகிராம்ல இன்னும் அவருக்கும் சொன்ன விஷ் இருக்கு. அதை தயவு செஞ்சி பாருங்க என்று கூறியுள்ளார் அனிதா.

-விளம்பரம்-
Advertisement