வாய திறந்தாலே பொய். மீரா மிதுன் ஊழல் தடுப்பு அதிகாரியா ? இந்த ஆதரங்களை பாருங்க.

0
3446
meera-mithun
- Advertisement -

பிக்பாஸ் மீரா மிதுன் ஒரு மத்திய அரசாங்க அதிகாரியா? என்று மக்கள் குழம்பி போய் உள்ளார்கள். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றன நெட்டிசன்கள். நடிகை மீரா மிதுனை பற்றி சொல்லவே வேண்டாம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே எல்லாருமே பார்த்திருப்பீர்கள். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் மீரா மிதுன் பற்றி பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. ஏன்னா, அந்த அளவிற்கு நடிகை மீரா மிதுன் மீது பிரச்சனைகள் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இவரை ‘சர்ச்சை நாயகி’ என்றும் சொல்லலாம். அதோடு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில் தற்போது அனைவரும் வியக்கும் அளவிற்கு மீரா மிதுன் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் மீரா மிதுன் தமிழ்நாடு ஸ்டேட் anti-corruption கமிஷனில் உள்ளார் என்று தெரிகிறது. அதாவது இவர் லஞ்ச ஒழிப்பு துறையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-

நவம்பர் 14 ஆம் தேதி மீரா மிதுன் தமிழகத்தின் சென்னை ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரியாக நியமிக்கப்பட்ட கடிதம் மற்றும் ஐடி கார்டை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும்,இது குறித்து மீரா மிதுன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது,” இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. நான் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். அதில் இவருடைய பெயர் தமிழ்ச்செல்வி என்று இருந்தது. அவளுடைய உண்மையான பெயர் தமிழ்ச்செல்வியா?? என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மத்திய அரசின் பணி எப்படி கிடைத்தது? அதற்கு வாய்ப்பில்லை? மீரா மிதுன் வாய திறந்தாலே பொய் என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.

இதையும் பாருங்க : மெட்டி ஒளி சீரியல் நடிகை காயத்ரியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா. புகைப்படம் இதோ.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இந்த தகவல்கள் எல்லாம் உண்மையா? பொய்யா?என்ற குழப்பத்தில் உள்ள போது ஒரு தகவல் கிடைத்து உள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசின் ஊழல் தடுப்பு பிரிவுகளின் லோகோ வேறு, மீரா மிதுன் வெளியிட்ட ஆதாரத்தில் இருக்கும் லோகோ வேறு என குறிப்பிட்டிருந்தனர். மீரா மிதுன் பதிவில் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அது கடிதத்தில் “Volunteer Basis ” என குறிப்பிட்டு இருந்தது. அந்த கடிதத்தில் இரண்டாவது வரிசையில் பாருங்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரியாக கூறும் “Anti Corruption Commission ” மத்திய அரசோ அல்லது மாநில அரசோ இல்லை. இது ஒரு தன்னார்வ விசாரணை ஏஜென்சி. அதாவது “N G O” அமைப்பின் anti-corruption கமிஷன் உடையது என்று குறிப்பிட்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-
meera mithun

மேலும், அரசு சாரா தன்னார்வ நிறுவனத்தின் பதிவு எண் 1372 / 2018 கொண்டு தன்னார்வ அமைப்புகளின் விவரங்களில் தேடிய பொழுது ” Anti Corruption Commission ” என்ற N G O அமைப்பு ஒன்று 2018 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டது என தெரிய வந்துள்ளது. மேலும்,இந்த 2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட anti-corruption கமிஷன் என்ற என்ஜிஓ அமைப்பால் நியமிக்கப்பட்டது தான் இந்த ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரி மீரா மிதுன் என்று தெரிய வந்துள்ளது. மேலும்,இதை தான் மீராமிதுன் பெரிய அளவுக்கு பில்டப் பண்ணி பதிவு செய்து உள்ளார் என்றும் கூறிவருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement