பிக்பாஸ் மீரா மிதுன் ஒரு மத்திய அரசாங்க அதிகாரியா? என்று மக்கள் குழம்பி போய் உள்ளார்கள். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல கேள்விகளை எழுப்பி வந்தனர் நெட்டிசன்கள். நடிகை மீரா மிதுனை பற்றி சொல்லவே வேண்டாம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே எல்லாருமே பார்த்திருப்பீர்கள். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் மீரா மிதுன் பற்றி பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. ஏன்னா, அந்த அளவிற்கு நடிகை மீரா மிதுன் மீது பிரச்சனைகள் கூறப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் இவரை ‘சர்ச்சை நாயகி’ என்றும் சொல்லலாம்.அதோடு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனைவரும் வியக்கும் அளவிற்கு மீரா மிதுன் குறித்து ஒரு தகவல்வந்தது . அது என்னவென்றால் மீரா மிதுன் தமிழ்நாடு மாநிலத்தின் anti-corruption கமிஷனில் உள்ளார் என்பது தான். அதாவது மீரா மிதுன் இவர் லஞ்ச ஒழிப்பு துறையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவரு கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : பேராண்மை படத்தில் நடித்த இவர ஞாபகம் இருக்கா ? கடற்கரையில் நடத்திய படு கிளாமர் போட்டோ ஷூட்.

Advertisement

கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி மீரா மிதுன் தமிழகத்தின் சென்னை ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரியாக நியமிக்கப்பட்ட கடிதம் மற்றும் ஐடி கார்டை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும்,இது குறித்து மீரா மிதுன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது,” இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. நான் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால், தற்போது தமிழ்நாட்டின் ஊழல் தடுப்பு அதிகாரியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருப்பது அலிஷா அப்துல்லா தான் கார் ரேஸ் பந்தயம் வீராங்கனையான இவர் நடிகர் அஜித்தின் தோழியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது கடந்த சில மாதங்களாகவே இவர்தான் தமிழ்நாட்டின் ஊழல் தடுப்பு அதிகாரியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதிலிருந்தே மீராமிதுன் சொன்னது அனைத்தும் பொய் என்பது தெரியவந்துள்ளது

Advertisement
Advertisement