பிக் பாஸில் நீங்கள் தொகுப்பாளராக இருக்க தகுதியே இல்ல – விளாசிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்.

0
14345
biggboss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. கொரோனா பிரச்சனை காரணமாக இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படவில்லை.சமீபத்தில் தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி துவங்கப்பட்டது. மேலும், தமிழில் இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அடுத்த மாதம் 4 ஆம் தேதி அல்லது 11 ஆம் தேதி துவங்க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தவிட மாட்டேன் என்று மீரா மிதுன் சவால் விட்டுள்ளார். நடிகையும் முன்னாள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான மீரா மிதுன் கடந்த சில வாரமாக சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த வீடியோவில், சேரன் விவாகரத்தில் நடிகர் கமல் ஹாசன் தவறான முடிவை அறிவித்து தனது பிரபலத்திற்க்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும். தனக்கு சேரன் தன்னிடம் தவறாக நடந்த அந்த குறிப்பிட்ட வீடியோ பதிவு தனக்கு வேண்டும் என்றும் அது கிடைக்காமல் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடக்க விடாமல் ஸ்டே வாங்குவேன் என்றும் சவால்விட்டுள்ளார் மீரா மிதுன்.மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க தகுதியே இல்லை என்று கூறியுள்ளார் மீரா மிதுன்.

எனக்கு அந்த வீடியோ பதிவு கிடைக்கும் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தவிடமாட்டேன். உங்களின் மகளின் படங்களும் வெளி வராது என்றும் கூறியுள்ளார் மீரா மிதுன். ஏற்கனவே நடிகை மீரா மிதுன் அருண் விஜய் நடித்து வரும் ‘அக்னி சிறகு’ படத்தில் கமிட் ஆகி இருந்தார். ஆனால், அவருக்கு பதிலாக கமலின் மகள் அக்ஷரா ஹாசன் கமிட் செய்தனர். இதனால் கமல் தான் தனது பவரை பயன்படுத்தி தன்னை அந்த படத்தில் இருந்து நீக்கியாக மீரா மிதுன் குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement