முகென் தந்தை மறைவிற்கு ஆறுதல் சொன்ன மீராவை கழுவி ஊற்றிய ரசிகர்கள். அதற்கு காரணமும் இருக்கிறது.

0
77156
meera-mugen
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் பட்டத்தை வென்ற முகன் ராவின் தந்தை காலமாகியுள்ளதாக வெளியான செய்தி பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் முகென், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் அடக்கம். இதில் முகென் ராவ் தமிழ் ரசிகர்கள் சிலருக்கு தெரியவும் வாய்ப்பு இருகிறது.

-விளம்பரம்-

மலேசியாவை சேர்ந்த இவர், ஒரு ஹிப் ஹாப் பாடகராவார். இதுவரை மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இவருக்கென்று மலேசியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் தமிழிலும் ஒரு ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதே போல இவரது ஒரு சில ஆல்பம் பாடல்கள் இந்தியாவிலும் கொஞ்சம் பிரபலம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் இவருக்கு மலேசியாவில் இருந்து பல்வேறு ஆதரவுகள் குவிந்து வந்தது.

- Advertisement -

இவருக்கென்று மலேசிய மக்கள் பல்வேறு ஆர்மியை கூட சமூக வலைத்தளங்களில் துவங்கி இருக்கின்றனர். இந்தநிலையில் முகென் ராவ்வின் தந்தையான பிரகாஷ் ராவ் கடந்த செவ்வாய் கிழமை, ஜனவரி 27 காலமாகி இருந்தார் . பிரகாஷ் ராவ், அன்று மாலை 6 20 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமாகி இருக்கிறார். அவருடைய வயது 52. முகென் ராவின் தந்தை காலமானதையொட்டி அவரது நண்பர்களும் பிக்பாஸ் போட்டியாளர்களும் வருத்தத்தையும், ஆறுதலையும் கூறினார்கள்.

-விளம்பரம்-

அதே போல பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதனும், முகென் ராவ்வின் தந்தை மரணத்திற்கு ஆறுதல் தெரிவித்து இருந்தார். அதில், தைரியமாக இரு முகன் இந்த உலகத்தில் அனைத்தும் தெய்வத்தின் காரணமாகத்தான் நடக்கிறது. உன்னுடன் நான் எப்போதும் இருப்பேன் எப்போது வேண்டுமானாலும் எனக்கு நீ கால் செய்யலாம். எட்வின் இடம் என்னுடைய நம்பர் இருக்கிறது. நீ ஜெயிப்பதற்காக பிறந்தவன் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகெனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் மீராமிதுன் கழுவி ஊற்றி வருகிறார்கள். அதில் ஒரு ரசிகர் மிகவும் ஆபாசமான வார்த்தையை பயன்படுத்தி உனக்கு வேற வேலையே இல்லையா, இதை பார்க்க விபச்சாரம் பண்ணி பிழைத்துக்கொள் என்று மோசமாக கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த மீரா மிதுன் எனக்கு கடினமாக உழைத்து எப்படி சம்பாதிக்க வேண்டும் என்பது தெரியும் என்று பதிலளித்துள்ளார். ரசிகர்கள் மீரா மிதுன் மீது இந்த அளவிற்கு கோபமடைய காரணமும் இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறந்தபோது மீரா, முகென் குறித்து பல்வேறு எதிர்மறையான கருத்துக்களை கூறி வந்தார்.

அதுமட்டுமில்லாமல் முகேன் பிக் பாஸ் பட்டத்தை வெல்வதற்கு சில நாள் முன்பாக பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற மீராமிதுன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த ஆடியோவில் முகெனும் நானும் ஒன்றாக இருப்பது போல வீடியோவை தயார் செய்யுங்கள் அதற்கு நான் சரியான பணம் தருகிறேன் என்று பேசியிருந்தார் மீராமிதுன். மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீராமிதுன் பிக்பாஸ் வீட்டில் முகென் செய்ததையெல்லாம் சொல்லி இருந்தால் அவருக்கு பிக்பாஸ் பட்டமே கிடைத்திருக்காது என்றெல்லாம் கூறி வீடியோவை வெளியிட்டு இருந்தார்(அந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்) என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்படி எல்லாம் பேசிவிட்டு தற்போது முகெனுக்கு ஆறுதல் சொன்னதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Advertisement