பிக் பாஸ்பாஸ் வீட்டில் என்னை நிறைய பேர் காதலிக்கிறேன்னு சொன்னாங்க.. சர்ச்சையை கிளப்பிய மீரா.

0
52586
meera
- Advertisement -

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்ட மீரா மிதுன், கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் குறித்து பல்வேறு சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முகென் ககுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை தமிழில் நீங்கள் அறிந்திருந்தால், இந்த நிகழ்ச்சியில் மிகவும் சர்ச்சைக்குரிய பங்கேற்பாளர்களில் ஒருவரான மீரா மிதுனைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

-விளம்பரம்-
https://twitter.com/meera_mitun/status/1183408682484355072

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள் அந்த வகையில் மீராமிதுன் சர்ச்சை ஒன்றும் குறைவான ஆள் கிடையாது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே மீராமிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் மேலும் சூப்பர் மாடல் என்ற பெயரில் பல்வேறு பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது ஜோ மைக்கல் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இப்படிப்பட்ட சர்ச்சையான ஒரு நேரத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளிலிருந்தே இவரை அபிராமி மற்றும் சாக்ஸி டார்கெட் செய்து தொடர்ந்து சண்டையிட்டு வந்தனர்.

- Advertisement -

முதலில் ரசிகர்களுக்கு சாக்க்ஷி மற்றும் அபிராமி மீது தான் கொஞ்சம் வெறுப்பு ஏற்பட்டது. ஆனால் போகப் போகத்தான் மீராமிதுன் உண்மையான சாயம் வெளுக்கத் தொடங்கியது. இதனால் அபிராமி மற்றும் சாக்க்ஷி செய்தது சரி தான் என்று ரசிகர்கள் பின்னர் உணர்ந்தனர். இதுநாள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்து பல்வேறு நபர்கள் மீது குற்றம் சாட்டி வந்த மீரா தற்போது முகன் மற்றும் தர்ஷன் தன்னை காயப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மீரா : “பிக்பாஸ் வீட்டில் சாண்டியை தவிர அனைவருமே எனக்கு எதிராக தான் இருந்தார்கள்மேலும், என் மீது மிகவும் பொறாமைப்பட்டார்கள், எல்லா நேரமும் என்னை அவமானப்படுத்துவதும் தனிமைப்படுத்துவதுவுமாக இருந்தார்கள். அது என்னை ஒருபோதும் பாதிக்கவில்லை. முகென் மற்றும் தர்ஷன் இரண்டு ஊமை மனிதர்கள் என்னை காயப்படுத்தத் தொடங்கினர், அவர்கள் வீட்டில் உள்ள அனைவராலும் கையாளப்படுகிறார்கள். பிக் பாஸ் இறுதிப் போட்டிக்குப் பிறகு கூட அனைவரும் சந்தித்த போது கூட, பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு ஆண்களும் என்னுடன் நிற்பதற்குப் பதிலாக என்னை துன்புறுத்தினர் என்று பதிவிட்டிருந்தார் மீரா.

https://twitter.com/meera_mitun/status/1183410642801352705

அதே போல மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டிக்குள் சிறப்பு விருந்தினராக சென்ற போது ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. அந்த ஆடியோவில், முகென் மற்றும் நானும் நிற்கமாக இருப்பது போல விடியோவை தயார் செய்து அதற்கு பின்னால் முகென் பாடிய பாடல்களை போடுங்கள். நானும் முகேனும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து போடுங்கள். இதை சரியாக செய்தால் உங்களுக்கு பணம் தருகிறேன் என்று மீரா, தனது நண்பருடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-
https://twitter.com/meera_mitun/status/1183412091991912448

இந்த நிலையில் அந்த சர்ச்சைக்கு பதில் அளித்து மீரா மிதுன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்த ஆடியோவில் பேசியது நான் இல்லை என்றும் நான் பல இடங்களில் பேசியதை ஒன்றாக இணைத்து நான் பேசியது போல சித்தரித்துள்ளார்கள் என்றும். பிக் பாஸ் வீட்டில் இருந்த போது முகெனுக்கும் எனக்கும் என்ன நடந்தது என்று தெரிந்தால் அவருடைய பெயர் தான் கேட்டிருக்கும் அவர் பட்டத்தை வெல்லவும் அது தடையாக இருந்திருக்கும், அதை எல்லாம் மறைத்து நான் பழியை சுமந்தேன் என்று மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் மீரா.

Advertisement