விஜய்யை அசிங்கமாக பேசிய மீரா மிதுன் – விஜய் நண்பர் சஞ்சீவ் என்ன சொல்லி இருக்கார் பாருங்க.

0
4127
meera

ரசிகர்களே விஜய் பற்றி பேசினால் சும்மா இருக்க மாட்டார்கள். ஆனால், விஜய் நண்பர் சஞ்சீவ் பற்றி சொல்லவா வேண்டாம். இப்படி ஒரு நிலையில் நடிகர் சஞ்சீவ் சமீபத்தில் விஜய் தனது ஆடியோ லான்ச்சில் பேசிய ‘Ignore Negativity’ என்ற வசனத்தை பதிவிட்டுள்ளார். சஞ்சீவ் பதிவிட்ட இந்த பதிவு மீரா மிதுனுக்குத்தான் என்று விஜய் ரசிகர்கள் பலரும் கமன்ட் செய்து வருகின்றனர். மேலும், மீரா மிதுனை அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது மீரா மிதுன் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிடிவாதமாக இருந்து வருகின்றனர்.

விஜய்யின் திரை துறை நண்பர்களின் சஞ்சீவ் மிகவும் ஸ்பெஷளானவர். விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதால்,சஞ்சீவ் எந்த பேட்டியில் பங்குபெற்றாலும் அவரிடம் விஜய் குறித்த கேள்வி கண்டிப்பாக முன்வைக்கப்படும். அதே போல சஞ்சீவ் மற்றும் விஜய் இருவருமே பெரும்பலம் நேரில் சந்தித்துக்கொண்டாள் கூட படங்களை பற்றி அவ்வளவாக பேசுவதும் இல்லை. அவ்வளவு ஏன், நண்பனாக இருந்தாலும் இதுவரை விஜய்யிடம் பட வாய்ப்பு கூட கேட்டதில்லை நடிகர் சஞ்சீவ்.அந்த அளவிற்கு சினிமாவையும் தனிப்பட்ட நட்ப்பையும் மெயின்டெய்ன் செய்து வருகிறார் சஞ்சீவ்.

- Advertisement -

விஜய்யின் திரை துறை நண்பர்களிலேயே சஞ்சீவ்விற்கு தான் விஜய்யை பற்றி அதிகம் தெரியும், காரணம் விஜய் படித்த அதே கல்லூரியில் தான் சஞ்சீவ்வும் படித்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட நண்பர்கள் தினத்தன்று விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிய புகைப்படம் ஒன்றை கூட சஞ்சீவ் பகிர்ந்திருந்தார்.

-விளம்பரம்-
Advertisement