விஜய்,சூர்யா விவகாரம் – மீரா மிதுனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை.

0
1869
meera

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய மீரா மிதுன், சமீப காலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் ரஜினி மற்றும் விஜய் குறித்து சமீபத்தில் ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.

- Advertisement -

அதே போல தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா குறித்து ட்விட்டரில் அவதூறான பதிவுகளை போட்டு வருகிறார் மீரா மிதுன். இதனால் பல்வேறு பிரபலங்களும் இவருக்கு கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் நடிகை சனம் ஷெட்டியும் மீரா மிதுனை கண்டித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

https://www.instagram.com/p/CDtzIiqhPwz/

இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த மீரா மிதுன், சனம் ஷெட்டியும் ஜோ மைக்கேலின் ஆள் தான். மேலும், அஜித் ரவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார் என்று கூறியிருந்தார். மீரா மிதுனின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள சனம் ஷெட்டி மீரா மிதுன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீரா மிதுனுக்கு வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார் சனம்.

-விளம்பரம்-
Advertisement