அகம்பாவ பேச்சு – அறிக்கை வெளியிட்டு மீரா மிதுனை வெளுத்து வாங்கியுள்ள எம் எஸ் பாஸ்கர்.

0
34385
msb
- Advertisement -

சமூக வலைதளத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன் கோலிவுட் மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா. இப்படி ஒரு நிலையில் மீராமிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியிருந்தார். தீ தன்னுடைய முகத்தை காபி செய்கிறார் என்றும், தமிழ் சினிமாவில் எஸ்சி இனத்தை சார்ந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை துரத்த வேண்டும் என்று மீரா மிதுன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் எஸ் சி இனத்தில் இருப்பவர்கள் அனைவரும் தவறான வழியில் செல்வதால் தான் உங்களை எல்லாம் அப்படி பார்க்கிறார்கள் என்றும் மீராமிதுன் பேசி இருந்தார்.

- Advertisement -

இவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது மேலும் இவரை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் மீரா மிதுனின் பேச்சை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர் எம் எஸ் பாஸ்கர். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,என்னவாயிற்று இந்தப் பெண்ணுக்கு. உன் போதைக்கு நான் ஊறுகாயா என்று காமெடியாகக் கேட்பார்கள். ஆனால், இவர் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல. வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம். சாதிப் பெயரைச் சொல்லிப் பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது.

இதையும் பாருங்க : Breaking News : வடிவேலுவுடன் பல்வேரு காமெடிகளில் நடித்த நடிகர் திடீர் மரணம் – அதுவும் இப்படி ஒரு நோயாம்.

எவ்வளவோ சாதித்தவர்கள் பலர் அடக்கமாக இருக்கும்போது இவர் ஏன் இவ்வளவு ஆணவமாகப் பேசுகிறார். சாதனைக்கும், அறிவுக்கும், சாதிக்கும் சம்பந்தம் ஏது? என் தெய்வம் ‘கலைஞானி’ கமலஹாசன் தன்னை ஒரு படத்திலிருந்து ஒதுக்கித் தள்ளிவிட்டார் என்று இவர் கூறியிருப்பதைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா. ஈர்க்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா. என்ன மூடத்தனமான பேச்சு இது. விஜய், சூர்யா ஆகியோர் பண்பின் சிகரங்கள். அவர்களுக்கு அடுத்து இவரது வசைபாடலில் இன்று கலைஞானியா..?

-விளம்பரம்-
msbhaskar-press-release-about-meera-mitun-video-speech

குறிப்பிட்ட சாதியினரைத் திரை உலகை விட்டுத் துரத்த வேண்டும் என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது. இவரது பேச்சு மனத்தைப் புண்படுத்தும் விஷயம் மட்டுமல்ல. மடத்தனம். அகங்காரத்தின் உச்சம். மற்றவர்கள் மனத்தைப் புண்படுத்தி விளம்பரம் தேடுவது கயமைத்தனம். இத்தகைய பேட்டிகளை யூடியூப் சேனல்கள் புறக்கணித்தாலே இப்படிப்பட்ட வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடலாம். மிகுந்த மனவேதனையோடு வன்மையாக இவரைக் கண்டிக்கிறேன். இனியாவது இவர் நாவடக்கத்தோடு இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

Advertisement