ரஜினிக்கு ஜோடியாக மீரா மிதுன் ? இது உண்மைன்னு சொன்னா நம்புவீர்களா.!

0
3700
Meera-Mithun
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை ஆரம்பத்தில் கொஞ்சம் ரசிங்கர்களின் ஆதரவை பெற்ற மீரா, சேரன் மீது சொன்ன குற்றச்சாட்டால் ஒரே நாளில் வெறுக்கப்ட்டார்.

-விளம்பரம்-
meera

மீரா மிதுனை பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் அறிந்தவர்களுக்கு தெரியும், இவர் பல்வேறு மோசடிகளை செய்து போலீஸ் கேசில் சிக்கியவர் என்று. ஆனால், இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டியது மீரா மிதுன் கூறி இருக்கிறார் என்பது தான் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

இதையும் பாருங்க : முகென் சாண்டியிடம் காதலிப்பதாக சொன்ன அந்த பெண் யார் தெரியுமா? இதோ புகைப்படம்.! 

- Advertisement -

சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீரா மிதுன். அதற்கு முன்பே ‘8 தோட்டாக்கள்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.

Petta

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட மீரா மிதுன், லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றுவிட்டார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு அவருக்கு கைகூடாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் த்ரிஷா.

-விளம்பரம்-

இது மட்டுமில்லை விக்ரம் நடிப்பில் வெளியான ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் மீரா மிதுன். ஆனால், சில காரணங்களால் கடைசி நேரத்தில் இவரை விட்டு விலகிப்போனது. பட வாய்ப்புகள் மீண்டும் வேறு வடிவத்தில், வேறு படங்களில் தன்னைத் தேடிவரும் என திடமாகநம்பினாராம் மீரா மிதுன்.

Advertisement