என்னது விஷால், மீரா மிதுனை திருமணம் பணிக்க கேட்டாரா. வெளியான மீரா மிதுனின் ஆதாரம்.

0
7565
meeravishal
- Advertisement -

சமூக வலை தளத்தில் கடந்த சில தினங்களாக மிகவும் ஹார்ட் தலைப்பாக பேசப்பட்டு வருவது மீராமிதுன் விவகாரம்தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று அவப்பெயரோடு திரும்பிய மீராமிதுன், அதன் பின்னர் பல்வேறு பிரபலங்கள் குறித்து சர்ச்சையான விஷயங்களை பேசி அதன் மூலம் பிரபலத்தை தேடிக்கொண்டார். அதிலும் குறிப்பாக சமீபகாலமாக விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு நபராக திகழ்ந்து வருகிறார். இதனால் இவர் மீது விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் படு காண்டில் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இவருக்கு எதிராக ஜோ மைக்கேல், வெங்கட் போன்றவர்கள் தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோகளையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் மீரா மிதுனின் பழைய மேனஜராக பணியாற்றிய வெங்கட், மீரா மிதுன் பேசிய பல்வேறு ஆடியோகளை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெங்கட் மீரா மிதுன், விஷால் குறித்து பேசும் ஆடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுள்ளார்.

இதையும் பாருங்க : செம்பருத்தி சீரியலில் ஏகப்பட்ட பாலிடிக்ஸ் – நடிகை பரதா நாயுடுவின் கண்ணீர் வீடியோ.

- Advertisement -

அந்த ஆடியோ பதிவில் மறுமுனையில் மீரா மிதுன், என்னுடைய அம்மாவிற்கு நான் விஷாலை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசை. மேலும், விஷாலும் என்னுடைய அம்மாவிடம் 2, 3 வருடங்களாக கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால், நான்தான் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு மிகவும் பணக்கார பையன் தேவை கிடையாது. எனக்கு மிகவும் சாதாரணமான பையன் கிடைத்தால் போதும். நான் யாரிடம் மிகவும் சவுகரியமாக இருக்கிறேனோ அவளுடன் இருந்தால் போதும் என்று பேசியிருக்கிறார் மீராமிதுன்.

மீரா மிதுன் தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்களிடம் எடுத்த பழைய புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு கொண்டுதான் இருந்தார். அவ்வளவு ஏன் சமீபத்தில் கூட நடிகர் சிம்புவுடன் இருக்கும் புகைப்படம் கூட வெளியாகி இருந்தது. மேலும், சிம்பு தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டதாகவும் மீராமிதுன் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி மனிதனை தமிழ் சினிமாவில் எத்தனை பேர்தான் காதலித்தார்கள் என்பது மீரா மனிதனுக்குத் தான் வெளிச்சம்.

-விளம்பரம்-
Advertisement