செம்பருத்தி சீரியலில் ஏகப்பட்ட பாலிடிக்ஸ் – நடிகை பரதா நாயுடுவின் கண்ணீர் வீடியோ.

0
1920
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், அவருக்கு ஜோடியாக ஆபிஸ் புகழ் கார்த்தியும் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-
View this post on Instagram

I really really miss u ????????

A post shared by bharatha_naidu (@actress_bharathanaidu_official) on

செம்பருத்தி சீரியலில் இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரியும் வேற லெவல். அந்த அளவிற்கு இவர்களுடைய ரொமான்ஸ் உள்ளது. இவர்கள் இருவருக்கு நிகராக செம்பருத்தி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் மித்ராவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான்.செம்பருத்தி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் மித்ராவின் உண்மையான பெயர் பரதா நாயுடு இவர் 2011 ஆம் ஆண்டு பாஸ்கர் இயக்கத்தில் வெளியான ‘தேன் மிட்டாய்’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘அட்ரா மச்சான் விசிலு’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : இவனுங்களுக்கு வேற வேலையயே இல்ல – தன்னை மியா கலீபாவுடன் ஒப்பிடுவோருக்கு பார்வதி அளித்த பதிலடி – வீடியோ இதோ.

- Advertisement -

மேலும், 2017-ம் ஆண்டு வெளியான ‘நிரஞ்சனா’ படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால், இவர் பெரிய அளவு பிரபலமாகவில்லை. இதனைத் தொடர்ந்து இவர் செம்பருத்தி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீரியல் படப்பிடிப்புகள் துவங்கியது. இப்படி ஒரு நிலையில் செம்பருத்தி தொடரில் பணியாற்றிவந்த ஒளிப்பதிவாளர் அன்பு என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார். இந்த செய்தியை வீடியோ மூலம் வெளியிட்டிருக்கும் நடிகை பரத நாயுடு.

செம்பருத்தி தொடரின் கேமரா மேன் அன்பு காலமாகிவிட்டார் என்ற செய்தி எனக்கு இப்போது தான் கிடைத்தது. எனது ஒன்றரை வருட செம்பருத்தி தொடர் பயணத்தில் நிறைய அரசியலைச் சந்தித்தேன். பெரிய போர்க்களமே. அப்போது தனியாக இருந்த எனக்கு ஒளிப்பதிவாளரும், இயக்குநரும் தான் உத்வேகம் அளித்தார்கள். எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருந்தார். சில நாட்களுக்கு முன்னர் தான் அவரிடம் பேசினேன். அவரைப் பற்றி திடீரென இப்படி ஒரு செய்தி நான் எதிர்பார்க்கவே இல்லை. சுற்றியிருப்பவர்கள் என்ன பேசினாலும் சாதிப்பதை மட்டுமே யோசி என்று எப்போதும் சொல்வார் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement