மகேஷ் பாபுவிற்காக மரக்கன்றை நட்ட விஜய். அதையும் கேலி செய்த மீரா மிதுன் – கடும் கடுப்பில் ரசிகர்கள்

0
3484
Vijay
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீஸனின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்த மீரா மிதுன் சமீப காலமாக விஜய் மற்றும் சூர்யா குறித்து ட்விட்டரில் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். இதனால் இவர் மீது விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். மேலும், இவர் மீது விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் புகார்களை கூட அளித்துள்ளனர். இந்த நிலையில் விஜய் தனது வீட்டில் மரக்கன்றை விதைத்த பதிவை கூட மீரா மிதுன் கேலி செய்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளைகொண்டாடி இருந்தார். இதற்கு பல்வேறு பிரபலங்களும் மகேஷ் பாபுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மகேஷ் பாபு நன்றிகளை தெரிவித்து இருந்தார்தனது பிறந்தநாளுக்கு மரக்கன்று ஒன்றை நட்டிருந்தார் மகேஷ் பாபு. இதுகுறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்த மகேஷ் பாபு, பிறந்த நாளைக் கொண்டாட இதை விட சிறந்த வழி இருக்கிறதா என்ன. கிரீன் இந்தியா சேலஞ்.

- Advertisement -

இதை நான் ஜூனியர் என்டிஆர், நடிகர் விஜய், நடிகை சுருதிஹாசன் போன்றவர்களுக்கு கொடுக்கிறேன். இந்த சங்கிலி எல்லைகளை கடந்து தொடரட்டும். அனைவரும் இதை ஆதரிக்க நான் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். மகேஷ் பாபுவின் இந்த சவாலை ஏற்ற விஜய் சமீபத்தில் தனது வீட்டில் மரக்கன்றை நட்டார்.

இதற்கு மகேஷ் பாபுவும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார் விஜய்யின் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் இதையும் கிண்டல் செய்துள்ள மீரா மிதுன், உங்கள் வீட்டுக்குள்ளேயே மரக்கன்றை நடுவது சமூக அக்கறை இல்லை. எப்படி மரக்கன்றை நட வேண்டும் என்று விவேக் சாரிடம் காத்துக்கொள்லுங்க என்று கேலியாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement