இதனால் நான் மீரா மிதுனை நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இருந்து தூக்கினாங்க – ஆடியோ ஆதாரம் இதோ.

0
2749
meera

கடந்த சில நாட்களாக ட்விட்டரில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருவது மீரா மிதுனின் சர்ச்சை தான். அதிலும் சமீப காலமாக விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பாலிவுட்டை போலவே நேபோட்டிசம் இருக்கிறது. அதனால் தான் என்னை போன்ற பெண்கள் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியவில்லை என்றும் கூறி வருகிறார் மீரா மிதுன்.

ஏற்கனவே, சில படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் பேட்ட படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் முதலில் தான் தான் நடிக்க வேண்டி இருந்தது என்று ஒரு மிகப்பெரிய குண்டை கூட தூக்கி போட்டார். அதே போல சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை ‘ படத்திலும் இவர் நடித்திருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் இவரது காட்சிகள் படத்தில் இல்லை என்று பார்த்து ஷாக்காகி போனார்.

- Advertisement -

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இருந்து இவரது காட்சிகளை நீக்கப்பட்டதற்கான காரணத்தை கூறிய மீரா மிதுன், பத்துநாட்கள் சுட்டெரிக்கும் சூரியனின் நேரம் பார்க்காமல் இந்தப்படத்தில் நான் நடித்திருந்தேன். மேலும், ஜிகிரி தோஸ்து என்ற பாடலிலும் நடித்திருந்தேன். ஆனால், பிக்பாஸில் இருந்து நான் வெளியே வந்ததும் சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன், விஜய் தொலைக்காட்சியில் சென்றதால் என்னை அந்த படத்திலிருந்து நீக்கியதாக கூறியிருந்தார்.

நம்ம வீட்டு பிள்ளை திரைப்பட பாடலில் ...

இப்படி ஒரு நிலையில் மீரா மிதுனை ஏன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இருந்து நீக்கினார்கள் என்ற ஆடியோ ஆதாரத்தை மீரா மிதுனின் பழைய மேனேஜர் வெங்கட், அதில் மறுபுறம் பேசும் நடிகை ஒருவர், மீரா மிதுன் தனியாக கேரவன் கேட்டதாகவும், ஒரு 3 நாட்கள் அதிகமாக கால்ஷீட் கேட்ட போது முடியாது என்று கூறியதாகவும், சன் பிக்சர்ஸிடமே சீன் போட்டதால் தான் அவரது காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement