மீரா மிதுன் இறந்து விட்டதாக வைரலான ட்வீட் – என் மகளை காணும் என்று கதறி அழுத தாயார்.

0
41031
meeramithun
- Advertisement -

சமூக வலை தளத்தில் கடந்த சில வாரமாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில்தான் பிக்பாஸில் கலந்து கொண்டார் மீராமிதுன். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளி விட்டார் என்று இவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும்இவர் டுவிட்டரில் அடிக்கடி சரியான விஷயங்களை பதிவிட்டு வந்தார். அதிலும் கடந்த சில வாரமாக ஹோலிவுட்டு மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா .

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மீரா மிதுன் இறந்துவிட்டார் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று போடப்பட்டிருந்தது. இந்த ட்வீட்டை மீராமிதுன் போட்டாரா இல்லை வேறு யாராவது மீராமிதுன் கணக்கை ஹேக் செய்து இந்த பதிவை போட்டார்களா என்பது தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்கள் பலரும் மற்ற சர்ச்சை போலவே இந்த ட்விட்டையும் போட்டு மீராமிதுன் பிரபலத்தை ஏற்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள் என்று கமன்ட் செய்து வந்தார்கள். .

இப்படி ஒரு நிலையில் மீராமிதுன் தாயார் பேட்டி ஒன்றில் தனது மகள் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்று அழுது புலம்பி இருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியுள்ள அவர் அந்த பதிவை என்னுடைய மகள் போடவில்லை இது அந்த சமயத்தில்தான் போட்டிருப்பான் என்னுடைய மகள் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவளுக்கு ஒன்னும் ஆகக்கூடாது. அவளுக்கு போன் செய்தாலும் செல்லவில்லை. யார் அந்த டீவீட்டை போட்டார்கள் என்று தெரியவில்லையே என்று அழுது புலம்பி இருக்கிறார் மீரா மிதுனின் தாயார்

-விளம்பரம்-
Advertisement