சுதந்திர நடை என்று குறிப்பிட்டு வீடியோ பதிவிட்ட மீரா.! கையில் இருப்பதை கண்டு கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

0
30045
Meera-Mithun
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்தார் சூப்பர் மாடல், நடிகை, அழகி என்று பல்வேறு விதமாக தன்னை சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தான். மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது சரண் தன்னை தப்பான இடத்தில் தொட்டார் என்று குற்றம் சாட்டினார். ஆனால், சேரன் விஷயத்தில் மீரா பொய் சொல்கிறார் என்று கமல் போட்டு காண்பித்த குறும்படம் மூலம் அப்பட்டமாக நிருமானமானது.

-விளம்பரம்-

இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் உண்மை ஒரு நாள் வெளியில் வரும் என்று புலம்பிக்கொண்டு தான் இருக்கிறார் மீரா. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், அவரது தோழர் ஒருவருடன் உரையாடும் ஆடியோ ஒன்று வெளியாகினது. அந்த ஆடியோவில் சேரன் பெயரை கெடுக்க திட்டம் தீட்டினார் மீரா. அதே போல கடந்த வாரங்களுக்கு முன்னர் மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் சென்றிருந்தார். ஆனால், செல்வதற்கு முன்பாக முகேனும் தானும் நெருக்கமாக இருப்பது போல விடியோவை போட வேண்டும் என்று மீரா மிதுன் அவரது நண்பருடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இத்தனை பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் சந்தித்தாலும் மீரா மிதுனுக்கு பட வாய்ப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன் முறையாக தனது திருமணம் குறித்து பேசிய லாஸ்லியா.!

- Advertisement -

ஏற்கனவே, சில படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் பேட்ட படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் முதலில் தான் தான் நடிக்க வேண்டி இருந்தது என்று ஒரு மிகப்பெரிய குண்டை கூட தூக்கி போட்டார். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஒட்டியுள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ளதாகவும் சில பதிவகளை போட்டிருந்தார். ஆனால், இவர் நடித்த ஒரு காட்சி கூட அந்த படத்தில் இடம்பெறவில்லை.

-விளம்பரம்-

இதனால் கடுப்பான மீரா மிதுன் நம்ம வீட்டு பிள்ளை பட குழுவினரை கடுமையாக சாடியிருந்தார். இப்படி சர்ச்சைக்கு கொஞ்சமும் சளைக்காத மீரா மிதுன் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுருந்தார். அந்த பதிவில் ‘freedom walk’ என்று குறிப்பிட்டுள்ள மீரா மிதுனின் ஒரு கையில் சிகெரெட் இருப்பதை கண்ட ரசிகர்கள் இதற்கு பெயர் தான் சுதந்திர நடையா என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஏற்கனவே மீரா மிதுன் இது போன்ற பல்வேறு சர்ச்சையான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். அந்தவகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கையில் பீர் பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். இதனை கண்டு ரசிகர்கள் பலரும் பல்வேறு விதமான விமர்சனங்களை முன் வைத்தார்கள். ஆனால், அதற்கான ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்ட மீராமிதுன் தீர்மானிக்கும் உடம்பிற்கு கெடுதல் கிடையாது அது வெறும் பார்லி தான் என்று மிகவும் சர்வசாதாரணமாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement