பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன் முறையாக தனது திருமணம் குறித்து பேசிய லாஸ்லியா.!

0
7742
losliya-kavin
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 வேற லெவல் கூட சொல்லலாம்.ஏன்னா அந்த அளவுக்கு காதல் காவியமாக இருந்தது.பிக் பாஸ் சீசன் 1,2ல் இருந்த போட்டியாளர்கள் எல்லாரும் காதலிச்சாங்க, சண்டை போட்டாங்க ஆனா, வெளிய போனவுடன் அதைப் பற்றி எந்த ஒரு தகவலும் வரவில்லை.ரசிகர்களும் பிக் பாஸ் முடிந்தவுடன் அதை பற்றி பேசமாட்டாங்க. ஆனால், இந்த வருடம் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் லாஸ்லியா,கவின் காதல் பற்றிப் பேசாதவர்கள் யாருமே இல்லைங்க.சமீபத்தில் நடந்த பேட்டியில் லாஸ்லியா எங்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் திருமணம் செய்துகொள்வோம் என்று கூறியிருந்தார்கள்.வாங்க அவங்க காதல் காவியத்தை பார்க்கலாம்..

-விளம்பரம்-
losliya

முதல்ல அவங்க ரெண்டு பேரும் நண்பர்களாக தான் இருந்தார்கள். மேலும் லாஸ்லியா,கவின் நட்பு சில நாட்களில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதனாலேயே சேரன் சேரன், சாண்டி என பல பேர் முதலில் இவர்களின் காதலை எதீர்த்தார்கள். ஆனால், ரசிகர்களிடையே அதிக அளவு வரவேற்கப்பட்டார். மேலும், பிக்பாஸில் நடந்த ப்ரீஸ் டாஸ்கில் லாஸ்லியாவின் குடும்பத்தினர்கள் வந்து இருந்தார்கள். அதில் லாஸ்லியா அப்பா நீ இதுக்கு தான் வந்தயா? என்ன சொல்லி வந்த, உன் வேலையை பாருன்னா அதை விட்டு வேற என்னவோ பண்ணிட்டு இருக்க என்று சராமாரியாக வெளுத்து வாங்கினார். ஆனாலும், லாஸ்லியா அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவர்கள் இருவரும் மீண்டும் தங்களின் காதல் பயணத்தை செய்ய ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிப்போட்டிக்கு நெருங்கும் நேரத்தில் ஊடகத்திலிருந்து ஆட்கள் வந்தார்கள். அவர்கள் லாஸ்லியாவிடம் காதல் குறித்து கேட்டபோது, லாஸ்லியா என் பெற்றோர் சம்மதத்துடன் தான் நான் திருமணம் செய்வேன் என்று கூறினார்.மேலும்,என் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து என்னிடம் பேசியது வெளியில பெருசா போய் இருக்கும். ஆனா அவங்க என்ன திட்டினாலும், பேசினாலும்,அடித்தாலும் அவங்க என் குடும்பத்தார்.எங்களுக்குள்ள எந்த ஒரு உறவு விரிசலும் ஏற்படாது. ஏன்னா அவங்க என் நன்மைக்காக தான் பேசினார்கள் என கூறினார் . அவரது சமூகம் எங்களை எப்படி நடத்தியது? என அவருக்கு தெரியல. எங்க அப்பா எல்லோரிடம் ரொம்ப பாசமாக இருப்பவர். என்னுடைய அப்பா, அம்மாவும் காதலித்து தான் திருமணம் செய்தார்கள்.

kavin losliya

அதனால் எங்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். மேலும் அவர்களுடைய காதல் கதையை சொல்லி தான் வளர்த்தார்கள்.பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும் கவின், லாஸ்லியா காதல் பற்றிய பேச்சுகள் சமூக வலைத்தளங்களிலும் போய்க் கொண்டுதான் உள்ளது. விஜய் டிவியில் நடந்த எந்த சீசனிலும் இந்த அளவுக்கு காதல் குறித்து ரசிகர்கள் பேசியது கிடையாது. அந்த அளவிற்கு காதல் காவியமாய் மாறினார்கள் கவின் லாஸ்லியா. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மட்டும் தான் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே முடியும் வரை காதல் நிகழ்ச்சியாக போயிருந்தது.மேலும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே கவின், லாஸ்லியா காதல் குறித்து சமூக வலைத்தளங்களில் “கவிலியா” என்ற ஹேஸ்டேக் ஒன்றை ட்விட்டரில் உருவாக்கி அவ்வப்போது அவர்கள் காதல் குறித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே இது தான் ட்ரெண்டிங் நியூஸ் ஆக இருந்தது. கவின், லாஸ்லியா ரசிகர்களும் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் இதில் மோதிக் கொள்வார்கள்.மேலும், சண்டைபோட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்வார்கள். ஆனால், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் கவிலியா ஹேஸ்டேக் தொடர்ச்சியாக போய்க் கொண்டுதான் இருக்கிறது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் நடிகர் கார்த்திக் அவர்களின் நடிப்பில் வெளிவர உள்ள ‘கைதி’ படத்தின் ஹேஸ்டேக் நேற்றுதான் ட்விட்டரில் முதன்முதலில் பதிவு செய்தார்கள். இது தான் ட்ரெண்டிங்காக நேற்றுவரை இருந்தது. ஆனால், திடீரென்று இன்று பரபரப்பாக கவிலியா காதல் குறித்து பேசி வருகிறார்கள். கைதி நியூஸை முந்தி சென்றது கவிலியா நியூஸ். இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் சந்தோஷத்திலும் உள்ளார்கள். சீக்கிரமாகவே கவின், லாஸ்லியாவின் காதல் திருமணம் குறித்து சொல்வார்கள் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர். இவங்க ரெண்டு பேரும் திருமணம் செய்தால் சூப்பராக இருக்கும் என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்

Advertisement