சுஜித்தின் மறைவில் கூட விளம்பரம் தேடும் மீரா. விடியோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

0
8608
meera-mithun-sujith
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக திகழ்ந்தவர் நடிகை மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே 8தோட்டாக்கள் தானாசேர்ந்தகூட்டம் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மீராமிதுன் மேலும படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மீராமிதுன் மேலும் 2016ஆம் ஆண்டின் மிஸ் சவுத் இந்தியா அழகியான மீராமிதுன் அழகிப் பட்டத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக அவரிடமிருந்து அழகிப் பட்டம் பறிக்கப்பட்டது.

-விளம்பரம்-

மேலும், அதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்த தர்ஷனின் காதலியும் நடிகையுமான சனம் ஷெட்டிக்கு அந்த விருது வழங்கப்பட்டது. மேலும்,மீரா குறித்து மைக்கேல் என்பவர் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களையும் தெரிவித்து வந்தார். இப்படி மீரா மிதுன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். குறிப்பாக சேரன் மீது அவர் வைத்திருந்த குற்றச்சாட்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், சேரன் விஷயத்தில் பொய் கூறியது அம்பலமானது அதன்பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு சரியான விஷயங்களை கூறி வந்தார். இதனால் சமூகவலைதளத்தில் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார்.

- Advertisement -

இதுமட்டுமல்லாமல் மீராமிதுன், புகைபிடிப்பது ஆண்களுடன் இரவு பார்ட்டியில் நடனமாடுவது, மது குடிப்பது என்று பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு தன்னை சர்ச்சைக்குரிய நபராகவே காட்டி வந்தார். இதனால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஆழ்துளைக்கிணறு சிக்கி உயிரிழந்த சுஜித் குறித்து மீராமிதுன் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்து நான்கு நாட்கள் கடந்து விட்டது. தற்போது 2 வயதான சுஜித் தற்போது 88 அடி ஆழத்தில் சிக்கி தவித்து அநியாயமாக உயிர் இழந்து உள்ளான்.

குழந்தையை மீட்பதற்கு பத்துக்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்கள் முயற்சி செய்தும் பயனில்லாமல் போனது. தீபாவளி கொண்டாட்டத்தை தாண்டி பலரும் சுஜித்துக்காக பிரார்த்தனையும்,பூஜைகளும் செய்து கடைசியில் அழுகிய நிலையில் தான் வெளியே எடுத்தார்கள். தமிழகமே சுஜித் நிலையை குறித்து கதிகலங்கி உள்ளது. சுஜித்தின் மறைவால் தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் சுஜித் இன் மறைவு குறித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்தினை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் மீராமிதுன் சமீபத்தில் சுயத்தின் மறைவு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

ஆனால், மீரா மிதுன் இந்த வீடியோவை நெட்டிசன்கள் மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணமே மீராமிதுன், சுஜித்தின் பரிதாபத்தை வைத்து ஆதாயம் தேடிக் கொள்கிறார் என்பது அந்த வீடியோவில் தெளிவாக புலப்படுகிறது. இந்த வீடியோவில் மிகவும் சோகமாக இருப்பது போல் காண்பிக்கும் மீராமிதுன், அழுவது போல் நடித்தாலும் அவரது கண்ணில் இருந்து எந்த ஒரு தண்ணீரும் வரவில்லை என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும், இரங்கல் தெரிவிக்கும் வீடியோவை கூட தன்னை அழகாக காட்டிக் கொள்ள ஆப்(B612) மூலம் மீராவின் வீடியோவை எடுத்து வெளியிட்டு உள்ளதையும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

Advertisement