சிவகார்த்திகேயன் மற்றும் பாண்டிராஜை திட்டி தீர்த்த மீரா.! சந்தோஷத்தில் ரசிகர்கள்.! காரணம் என்ன தெரியுமா ?

0
104676
meera

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் ரசிகர்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களும் ரசிகர்கள் வெறுக்கும் போட்டியாளர்களும் இருக்க தான் செய்கின்றனர். அந்த வகையில் இந்த சீசனில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்தார் சூப்பர் மாடல், நடிகை, அழகி என்று பல்வேறு விதமாக தன்னை சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தான். மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது சரண் தன்னை தப்பான இடத்தில் தொட்டார் என்று குற்றம் சாட்டினார். ஆனால், சேரன் விஷயத்தில் மீரா பொய் சொல்கிறார் என்று கமல் போட்டு காண்பித்த குறும்படம் மூலம் அப்பட்டமாக நிருமானமானது.

இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் உண்மை ஒரு நாள் வெளியில் வரும் என்று புலம்பிக்கொண்டு தான் இருக்கிறார் மீரா. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், அவரது தோழர் ஒருவருடன் உரையாடும் ஆடியோ ஒன்று வெளியாகினது. அந்த ஆடியோவில் சேரன் பெயரை கெடுக்க திட்டம் தீட்டினார் மீரா. அதே போல கடந்த வாரங்களுக்கு முன்னர் மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் சென்றிருந்தார். ஆனால், செல்வதற்கு முன்பாக முகேனும் தானும் நெருக்கமாக இருப்பது போல விடியோவை போட வேண்டும் என்று மீரா மிதுன் அவரது நண்பருடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இத்தனை பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் சந்தித்தாலும் மீரா மிதுனுக்கு பட வாய்ப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே, சில படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் பேட்ட படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் முதலில் தான் தான் நடிக்க வேண்டி இருந்தது என்று ஒரு மிகப்பெரிய குண்டை கூட தூக்கி போட்டார். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஒட்டியுள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ளதாகவும் சில பதிவகளை போட்டிருந்தார். ஆனால், அந்த படத்தில் மீரா மிதுன் நடித்த எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை. இதனால் மீரா மிதுன் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ள மீரா மிதுன், பத்துநாட்கள் சுட்டெரிக்கும் சூரியனின் நேரம் பார்க்காமல் இந்தப்படத்தில் நான் நடித்திருந்தேன். மேலும், ஜிகிரி தோஸ்து என்ற பாடலிலும் நடித்திருந்தேன். ஆனால், பிக்பாஸில் இருந்து நான் வெளியே வந்ததும் சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன், விஜய் தொலைக்காட்சியில் சென்றதால் என்னை அந்த படத்திலிருந்து நீக்கியதாக கூறியுள்ளன.ர்.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு வித தடங்கல்கள் நினைத்து நான் வருந்துகிறேன் சிவகார்த்திகேயனும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வந்தவர் தானே படத்தின் தரத்தையும் நடிகர்களில் தரத்தையும் உயர்த்த தொழிலில் கொஞ்சம் கலாச்சாரத்தை பின்பற்றுங்கள். இப்போதுதான் எனக்கு புரிகிறது பிரியங்கா சோப்ரா ஏன் இன்னும் தமிழ் சினிமாவில் நடிக்க வரவில்லை என்று. திறமையான பெண்கள் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாது மேலும் ஆணாதிக்கம் புத்தி கொண்ட சில நடிகர்கள் தங்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாக திறமையுடைய பெண்களுடன் நடிக்க மறுக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்