உங்க பேச்ச இவங்களே மதிக்கிறது இல்ல – சூர்யாவின் டீவீட்டை கேலி செய்த மீரா மிதுன்.

0
1624
meera

கடந்த சில தினங்களாக மீரா மிதுன் தான் சமூகவலைதளத்தில் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் ஒரு நபராக இருந்து வருகிறார் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசியதை பலரும் கண்டித்து வருகின்றனர்.மேலும், பல்வேறு பிரபலங்களும் மீரா மிதுனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இயக்குனர் பாரதி ராஜா இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.அதையும் மீரா மிதுன் விமர்சித்து இருந்தார்

இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா, மீரா மிதுனின் சர்ச்சைக்கு முதன் முறையாக பதில் கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா,எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அதுவும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பத்தை குறிப்பிட்டு இந்த டீவீட்டை பதிவிட்டுள்ளார். அதாவது, சன் மியூசிக் தொலைக்காட்சியில் கந்த 2018 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் இரண்டு தொகுப்பாளிகள் சூர்யா உயரத்தை கிண்டல் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போதும் சூர்யா, தனது ரசிகர்களிடம் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார்

இந்த நிலையில் சூர்யாவின் இந்த டீவீட்டையும் மீரா மிதுன் கேலி செய்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், ஒவ்வொரு இரண்டு வருத்தத்திற்கு ஒரு முறை நீங்கள் இதை தான் செய்கிறீர்கள். ஆனால், தற்போதும் உண்மை என்னவென்றால் உங்கள் வார்த்தைகளை உங்கள் ரசிகர்களே மதிப்பது கிடையாது. மேலும், பாரதிராஜாவின் மேடை பேச்சுக்கள் பல முறை மிகவும் மோசமாக இருந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று பதிவிட்டுள்ளார்

-விளம்பரம்-
Advertisement