நான் விர்ஜின், வேணும்னா டெஸ்ட் எடுத்து காமிக்காட்டா ? விடீயோவை தர்ஷனுக்கு டேக் செய்த மீரா.

0
22901
Tharshan Meera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு சர்ச்சையான போட்டியாளர்கள் இருந்து வந்தார்கள். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வனிதா மற்றும் மீராமிதுனை சொல்லலாம்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்றபிறகு மீராதான் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டு வரும் போட்டியாளராக இருந்துவந்தார் . இதற்கு முக்கிய காரணமே இவர் கூறிய பொய்களும் அடிக்கடி இவர் வடித்த போலியான கண்ணீரும் தான். அதிலும் சேரன் விஷயத்தில் இவர் ஆடிய நாடகம் அனைவரையும் எரிச்சல் ஏற்றியது.

-விளம்பரம்-

வீடியோவில் 5 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

- Advertisement -

அதே போல பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக மீரா அப்பட்டமாக பொய் சொல்லி இருந்தார். இதனால் கடுப்பான தர்ஷன் நான் இப்போது உன்னிடம் கூறினேன். எனக்கு வெளியில் காதலி இருக்கிறார் என்று கமல் முன்பே மிகவும் கோபத்துடன் மீராவை கத்தினார். ஆனால், அதற்குப் பின்னர்தான் தெரிந்தது மீரான் மீதும் தான் தர்ஷனை பிடிக்கும் என்று கூறியதாகவும் இதனால் தர்ஷனை தனது வீட்டிற்கு வந்து தனது அம்மாவிடம் பேச மாறும் கூறியிருந்தார் மீரா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் மீரா மிதுன் சர்ச்சை ஓயவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் மீரா மிதுன் தர்ஷனை தாக்கிப் பேசி பல்வேறு வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீராமிதுனிடம் நித்தியானந்தா குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நித்தியானந்தா ஆசிரமத்தில் கன்னித்தன்மையை உடைய இளம் பெண்கள் (அதாவது வெர்ஜின் பெண்கள் )தான் இருக்கிறார்கள. அதற்கு முக்கிய காரணமே விர்ஜின் பெண்களுக்கு சக்தி அதிகம் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

அப்போது நீங்கள் வெஜினா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, நான் விர்ஜின் தான் வேண்டும் என்றால் வெர்ஜின் சோதனையை எடுத்துச் சொல்லட்டுமா என்று கூறியுள்ளார் மீராமிதுன். மேலும், தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி விவகாரம் குறித்து பேசியுள்ள மீராமிதுன், தர்ஷன் விஷயத்தில் சனம் ஷெட்டி, தர்ஷனை விட்டு விலகிவிட வேண்டும். ஒருவருக்கு நம் மீது காதல் இல்லை என்றால் எதற்காக அவர்களை தொல்லை செய்ய வேண்டும். அன்பு இல்லாத இடத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம். அதனால் அவர்களை விட்டு விலகுவது தான் நல்லது என்றும் தர்ஷன் மிகவும் நல்லவர் என்றும் கூறியிருக்கிறார் மீராமிதுன். மேலு,ம் இந்த பேட்டியை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மீரா மிதுன் தர்ஷன் மற்றும் நித்யானந்தாவை டேக் செய்திருக்கிறார்

Advertisement