நீங்களாவது தைரியமா பேசுறீங்களே. தீவிர தல ரசிகர் ஆர் கே சுரஷுன் வீடியோவை பதிவிட்டு மீரா மிதுன் நன்றி.

0
3049
rk
- Advertisement -

கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருவது மீரா மிதுனின் ட்விட்டர் பதிவுகள் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான மீரா மிதுன் கடந்த சில தினங்களாக தமிழ் சினிமாவில் இருக்கும் நெபோட்டிசம் பற்றி பேசி வருவதாக நினைத்துக்கொண்டு விஜய் மற்றும் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் என்று பலரையும் அவதூறாக பேசி வருகிறார். இதனால் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

-விளம்பரம்-

மீரா மிதுனின் பேச்சுக்கும் பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஆர் கே சுரேஷ் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது தமிழ் சினிமாவில் இருக்கும் நேபோடிசம் பற்றி பேசி இருந்தார். அதில், நெபோட்டிசம் என்பது தமிழ் சினிமாவில் இருக்கிறது தான். அதை நானே எதிர்கொண்டு இருக்கிறேன் பேசிய ஆர் கே சுரேஷ்.

- Advertisement -

நடிகர் ஆர் கே சுரேஷ், அஜித்தின் தீவிர ரசிகர் என்பது பலரும் அறிந்த விஷயம் தான். அவ்வளவு ஏன் இவர் பில்லா பாண்டி என்ற படத்தில் அஜித்தின் தீவிர ரசிகரா நடித்திருந்தார். இந்த நிலையில் ஆர் கே சுரேஷ்சின் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மீரா மிதுன். நன்றி, நீங்களாவது மற்றவர்களை போல இல்லாமல் தைரியமாக பேசுறீங்களே. இதை பற்றி தைரியமாக பேச கொஞ்சம் நேரம் எடுக்கும் தான் என்று கூறியுள்ளார்.

மீரா மிதுன் தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேச வந்தாலும். இதை அவர் முதன் முதலில் நெபோடிசம் என்ற புள்ளி வைத்து தான் ஆரம்பித்தார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் இறந்த போது பாலிவுட்டை போல இங்கும் கோலிவுட் மாஃபியா இருக்கிறார்கள் என்று கூறி இருந்தார். ஆனால், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதால் தான் விஜய் சூரியாவை டார்கட் செய்து இருந்தார் மீரா மிதுன் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement