இதான் உனக்கு கடைசி வார்னிங் – திரிஷாவை எச்சரித்த மீரா மிதுன். இதான் காரணமாம்.

0
4725
meeramithun
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தவர்தான் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். மாடல் அழகியான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் என்ற அழகி பட்டத்தையும் பெற்றிருந்தார். ஆனால், இவர் மீது தொடரப்பட்ட பல்வேறு மோசடி வழக்கு காரணமாக அந்த பட்டம் இவரிடம் இருந்து பறிக்கப்பட்டு பின்னர் அதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி இடம் ஒப்படைக்கப்பட்டது.

-விளம்பரம்-

இருப்பினும் நான் தான் இன்னமும் 2016ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா அழகி என்றும், அந்தப் படம் இன்னமும் என்னிடம் தான் இருக்கிறது என்றும் கூறிவருகிறார்.எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், தனது அன்றாட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதே போல பல்வேறு பிரபலங்களை வம்பிழுத்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக்கொள்ள முயற்சித்தும் வருகிறார்.

இதையும் பாருங்க : உடலின் இதுக்கு கிழ எனக்கு சொரனையே கிடையாது – பிக் பாஸிலேயே தனது உடல் நலம் குறித்து சொன்ன பொன்னம்பலம்.

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் மீரா மிதுன், தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான த்ரிஷாவை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், இதுதான் உன்னுடைய கடைசி எச்சரிக்கையாக இருக்க போகிறது திரிஷா அடுத்த முறை என்னுடைய உருவத்தையோ அல்லது என்னுடைய முடியையோ பயன்படுத்தி என்னை போல இருக்க வேண்டும் என்று போட்டோ ஷாப் செய்தால் நீங்கள் சட்ட ரீதியாக பிரச்னையை ஏத்திக்கொள்வீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகை நயந்தாஹ்ரா கண்ணாடி செல்ஃபீ புகைப்படம் ஒன்றை பதிவிட்டி இருந்தார். அதில் அவருடைய செல் போனின் சிகப்பு நிற கவர் தெரியும்படி போஸ் கொடுத்து இருந்தார்.அதனை பகிர்ந்த மீரா மிதுன் என்னுடைய செல் போன் கவரை கூடவா காப்பி அடிப்பார்கள். படிக்காத நடிகை மட்டுமே இந்த வகையான அனைத்தையும் செய்கிறார். உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை பெறுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement