‘அசிங்கமா ஒரு போஸ்ட்ட போட்டுட்டு, கணபதிபப்பா போறியாவா’ – மீரா மிதுனை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
3624
meera
- Advertisement -

சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது மீரா மிதுனின் சர்ச்சை. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் கிடைக்காததால் அடிக்கடி எதாவது சர்ச்சையான விஷயங்களை பேசி வந்தார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யா குறித்து பேசி ரசிகர்களின் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

-விளம்பரம்-

விஜய் மற்றும் சூர்யா குறித்து எதாவது அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டாலும், அதிலும் அம்மணி அரை குறை ஆடையில் தான் காட்சியளிக்கிறார். இப்படி ஒரு நிலையில் மீரா மிதுன் ஒரு புதிய வெப் தொடரில் நடிப்பதாக கடந்த சில தினங்களாக கூறி இருந்தார். மற்ற விஷயத்தில் இவர் விடும் கப்ஸா போலவே இதுவும் எதாவது பப்லிசிடிக்காக தான் இருக்கும் என்று பலரும் நினைத்து வந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை மீரா மிதுன், dreamy night என்ற வெப் தொடரில் நடித்துள்ளதாக கூறியுள்ளார். அம்மணிக்கு தற்போது இருக்கும் பிரச்சனையில் தமிழ் நாட்டில் ஒரு பிட்டு சீன் கூட எடுக்க முடியாது அதனால் டெல்லியில் இந்த வெப் சீரியஸை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், அந்த வெப் சீரிஸிலிருந்து, அரை குறை ஆடையில் இருக்கும் சில புகைப்படங்களை வீடியோகளையும் வெளியிட்டு உள்ளார்.

இதை பார்க்கும் போது இது ஏதோ 18+ வெப் சீரிசாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 22) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வெப் சீரிஸ்ஸின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிடுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் மொபைல் போட்டோ ஷாப்ல பண்ணா கூட நல்லா இருக்கும் என்று கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
https://twitter.com/Thalapa42814971/status/1297138668985970688

மேலும், அம்மணி தனது இந்த வெப் சீரியஸை எடுத்துள்ளதாக கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை கூறியுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் ‘அசிங்கமா ஒரு போஸ்ட்ட போட்டுட்டு, கணபதிபப்பா போறியாவா’ என்று மீரா மிதுனை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Advertisement