இதற்காக தான் இவருக்கு டைட்டிலை விட்டுக் கொடுக்க நினைத்தேன்.! கமலிடம் சொன்ன முகென்.!

0
3154
Mugen

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலைக்கு முயன்றது, வனிதா மீண்டும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளது என்று பல்வேறு எதிர்பாராத விஷயங்கள் நடந்து வருகிறது.  

This image has an empty alt attribute; its file name is image-161.png

ஆனால், இந்த வாரம் மிகவும் மந்தமாகவே சென்று கொண்டு இருந்தது. இதனால் இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல் ஒவ்வொரு போட்டியாளரையும் தனியாக கனபெ்ஷன் ரூமிற்கு அழைத்து பல்வேறு அறிவுரைகளை அறிவித்திருந்தார்.

- Advertisement -

அப்போது முகனை அழைத்து பேசிய கமல், நீங்கள் முன்பு இப்போது பரவாயில்லை, ஆனால் அந்த நண்பர்கள் கூட்டத்தில் சேர்ந்து இப்போது முற்றிலும் போட்டி என்பதையே மறந்துவிட்டீர்களோ, அது மட்டுமின்றி அதிகமாக எமோஷனல் ஆகிறீர்கள் அதை எல்லாம் கட்டுப்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறினார்.

This image has an empty alt attribute; its file name is New-Project-2019-08-25T220155.618.jpg

இதற்கு பதிலளித்த முகென், நான் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறேன். இது வெறும் கேம் தான் என்று விளையாடத்தான் வந்திருக்கிறோம் என்று பலமுறை தோன்றும். தர்ஷன் ஒரு முறை தான் 19 வருடங்கள் வாழ்க்கையையே வாழவில்லை என்று கூறியிருந்தான். அப்போது தான் நான் அவன் ஜெயித்தால் போதும் என்று நினைத்தேன் என்று கூறினார் முகென்.

-விளம்பரம்-

Advertisement