சிண்டு முடிஞ்ச சாக்க்ஷி.! எரிச்சல் ஏத்திய அபி.! கட்டிலை உடைத்த முகென்.! என்ன ஆச்சு ?

0
6975
Abhirami

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களில் தற்போது ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருபவர்கள் தர்ஷன் மற்றும் முகென் தான். அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பேசிய விதம் அனைவரையும் கவர்ந்திருந்தது. ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் இறுதியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு சிறிய ப்ரோமோ முகென் கட்டிலை உடைத்தது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இன்றைய முதல் பிரமோவில் முகென், சாக்க்ஷி, அபிராமி ஷெரின் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கையில் அபிராமியிடம், சாக்க்ஷி ‘நான்முகனிடம் பேசுவது உனக்கு பிடிக்கவில்லையா’ என்று கேட்டகிறார். இதனால் கடுப்பான அபிராமி எப்போதும் நீ உன்னை பற்றி மட்டும்தான் பேசுவாயா என்று அந்த இடத்தை விற்று கோபமாக சென்று விடுகிறார்.

இதையும் பாருங்க : ஆடு, லிப்ஸ்டிக் போடு, இல்லைனா கவினொடு ஓடு.! லாஸ்லியாவை கழுவி ஊற்றும் இலங்கை தமிழர்.! 

- Advertisement -

அதன் பின்னர் லாஸ்லியாவிடம் அழுது புலம்பும் அபிராமி, எப்போதும் சாக்ஷிக்கு அவருடைய பிரச்சனை தான் முக்கியமா மற்றவர்களுக்கு மனசு என்பதே கிடையாதா. அதிலும் நான் அங்கிருந்து எழுந்து வரும்போது முகென் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தார் அது தான் எனக்கு மிகவும் எரிச்சலாக இருக்கிறது என்று புலம்பினார்.

இதை வைத்து பார்க்கும்போது இதற்குப் பின்னர் முகென் அபிராமியை சமாதானம் செய்ய முற்படும்போது அபிராமி எப்போதும் போல சீன் போட்டதால் கோபமடைந்த முகேஷ் கட்டிலை தன் கையால் ஓங்கி அடித்து அதனை உடைத்து உள்ளாரோ என்று எண்ணம் தோன்றுகிறது. இது நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் கூட ஒளிபரப்பப்பட்டது.

-விளம்பரம்-

நேற்றைய அந்த வீடியோவையும் இன்று வெளியான பிரம்மாவையும் வைத்துப் பார்க்கும்போது அபிராமி மற்றும் முகென் இருவருக்கும் இடையில் நடந்த பிரச்சனைக்கு சாக்க்ஷி தான் காரணமாக இருந்துள்ளார் என்பது தெரிகிறது. அதேபோல அபிராமி விஷயத்தில் முகென் பெயரை எடுத்துக் கொள்வாரோ என்று ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர். இதனால் அபிராமியை விட்டு விலகியிருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி வருகின்றனர்.

Advertisement