தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி உலக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது . மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 மாஸ் காட்டுச்சுங்க. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு தான் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் உலக மக்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ். மேலும்,முகென் தன்னுடைய திறமையாலும்,வீடா முயற்சியாலும் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வந்தார்.
இதனைத்தொடர்ந்து முகென் ராவ் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டி சென்றார். இது மட்டும் இல்லைங்க முகென் ராவ் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் என பல திறமைகளை கொண்டுள்ளவர். மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் முகென் ராவ்வை அழைப்பார்கள். மேலும்,இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் உலக மக்கள் அனைவரின் ஆதரவையும் அன்பையும் பெற்று, அதிக வாக்குகளோடு வெற்றியும் பெற்றார். மேலும், பிக் பாஸ் வீட்டில் முகென் ராவ் பாடிய பாடல் செம்ம ஹிட்டாகி உள்ளது. அது மட்டும் இல்லைங்க ” நீதான் நீதான்” என்ற பாடல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ளார். இந்நிலையில் மலேசிய மக்கள் கொடுத்த அன்பும், ஆதரவும் முகெனுக்கு மூச்சு திணற வைத்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் சுற்றியது.
அதில் சிறுமி ஒருவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது முகின் பாடிய “நீதான் நீதான்” என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். டைட்டில் வின்னர் ஆன சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் அவருடைய பாடல்தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமானது .இதனைத்தொடர்ந்து முகென் பாடிய இந்த பாடல் வெறித்தனமாக இருக்கு என்று இணையங்களில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். முகென் ராவை “எம்.ஜி.ஆர்” என்று தான் செல்லமாக அழைப்பார்கள். முகென் தன்னுடைய பாடல் மூலம் உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ளார். அதிலும் முகென் மீது பயத்தியமாக உள்ள ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடையாளத்தை போட்டு எம்.ஜி.ஆர் என்று பச்சை குத்திக் கொண்டு உள்ளார். முகெனுக்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இப்படி ஒரு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளார் என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.
ஆனால்,அந்த தீவிர ரசிகரின் பெயர், ஊர் என்று எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. மேலும், இந்த முக்கியமாக உள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லைங்க எப்பவுமே சினிமா பிரபலங்கள், பெரிய அளவில் உள்ள பிரபலங்களை மட்டும்தான் இந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால்,முகென் பிக்பாஸ் வீட்டில் இருந்த இந்த மூன்று மாதங்களிலேயே முகென் இந்த அளவிற்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்துள்ளார். இது பாராட்டுக்குரிய விஷயம் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். அதோடு பிக் பாஸ் சீசன் 3ன் வெற்றி கொண்டாட்டத்தில் முகென் ராவ் பாடிய பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.