இறுதியில் காதலை ஒப்புக்கொண்ட முகென்.. அவரும் ஓகே சொல்லிட்டாராம்..

0
164512
mugen
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் தான் அதிக காதல் கதை ஓடியது என்று கூறலாம். இந்த சீசனில் பல்வேறு இளம் போட்டியாளர்கள் பங்கு பெற்றது தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 3 எத்தனையோ காதல் கதைகள் ஓடினாலும் இந்த சீசனில் முதன் முதலில் ரொமான்ஸை ஆரம்பித்தது அபிராமி தான். கவின் மீது தனக்கு மிகப் பெரிய ஈர்ப்பு இருப்பதாகவும் அனைவர் முன்பும் தெரிவித்தார் அபிராமி. ஆனால், கவின் அபிராமியை கொஞ்சம் நிராகரிக்கவே அந்த வெறுப்பில் முகென் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார் அபிராமி.

-விளம்பரம்-
Image result for mugen nadiya

ஆரம்பத்தில் கவினை வெறுப்பேற்ற தான் முகேனிடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார் அபிராமி. ஆனால், நாட்கள் செல்ல செல்ல அது காதலாக மாறியது. என்னதான் அபிராமி முகெனிடம் பலமுறை பல விதமாக தனது காதலைத் தெரிவித்தாலும், மிகவும் தெளிவான எண்ணத்துடன் இருந்த முகென், அபிராமி தனக்கு வெறும் தோழி மட்டும் தான் என்று ஆணித்தனமாக கூறிக் கொண்டுதான் இருந்தார். அதேபோல அபிராமி ஒரு கட்டத்தில் முகென் மீது அதிக காதலில் விழுந்து விட தனக்கு வெளியில் நதியா என்ற ஒரு பெண்ணின் மீது மிகவும் ஈர்ப்பு இருப்பதாகவும் நாங்கள் இருவரும் வாழ்க்கையை பற்றி நிறைய விஷயங்களை பேசி உள்ளோம் என்றும் தனக்கு காதலி இருப்பதை சொல்லியும் சொல்லாமல் கூறியிருந்தார் முகேன்.

இதையும் பாருங்க : விஜய்க்கு நெருங்கிய உறவினராக மாறப்போகும் அதர்வா.! எப்படி தெரியுமா ?

- Advertisement -

ஆனால், அதன் பின்னரும் முகெனை லவ் டார்ச்சர் செய்வதை அபிராமி விடுவதாக இல்லை. இதனால் முகேனிடம் அடிக்கடி அபிராமி தனது காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் வனிதா பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் உள்ளே செல்ல முகென், காதலியான நதியாவை பற்றி அபிராமியிடம் வத்திவைத்தார். இதனால் கடுப்பான அபிராமி, முகெனிடம் சண்டை போட்டார். இருப்பினும் தான் எப்போதும் அபிராமியை வெறும் நல்ல தோழியாக மட்டும்தான் பார்த்தேன் என்று தான் கூறியிருந்தார் முகென். அதன் பின்னர் அபிராமி மற்றும் முகென் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பதாக கூறி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிராமி முகெனுக்கு தான் தனது ஆதரவை தெரிவித்து வந்தார்.

Image result for mugen nadiya

இந்தநிலையில் முகேன் இறுதிப்போட்டிக்கு நுழைந்த சில நாட்களில்முகென் காதலிப்பதாக சொன்ன நதியா முதன்முறையாக முகெனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவை கண்ட அபிராமி மிகவும் சோகம் அடைந்து, தன் பங்கிற்கு பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதன்பின்னர் அபிராமி முகெனுக்கு ஆதரவாக இருப்பதற்கு பதிலாக தனது ஆதரவை லாஸ்லியாவிற்கு தெரிவித்து வந்தார். இது ஒருபுறமிருக்க முகென் உண்மையில் யாரைத்தான் காதலிக்கிறார் என்ற ஒரு கேள்வி ரசிகர்கள் மனதில் ஓடிக் கொண்டே வந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வென்று பல்வேறு பேட்டிகளை கொடுத்து வரும் முகென் பேட்டி ஒன்றில் தனது காதலை உறுதி செய்துள்ளார்.

-விளம்பரம்-

அந்தப் பேட்டியில் முகெனிடம் உங்கள் காதலை நதியாவிடம் சொல்லி விட்டீர்களா அவருடைய பதில் என்ன ? அவர்கள் அதற்கு சம்மதித்து விட்டார்களா ? என்று கேள்வி கேட்ட போது ஆரம்பத்தில் கொஞ்சம் சிரித்தபடி முகென், அதன் பின்னர் ஆம், எல்லாம் சரியாகி விட்டது ஓகே சொல்லிட்டாங்க. இன்னும் சிறிது நாளில் அதனை நாம் ரசிகர்களுக்கு அறிவிக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன் என்று தனது காதலை உறுதி செய்துள்ளார் முகென். மேலும், தற்போது முகென் தனது சொந்த நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கே தனது காதலி நதியாவை சந்தித்து விரைவில் ஒரு நல்ல முடிவை சொல்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement