பிக் பாஸ் வெற்றியாளர் முகெனுக்கு கிடைத்த மாபெரும் சினிமா வாய்ப்பு.! முதல் படமே இவருடனா ?

0
83402
mugen
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது.மேலும், பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் தான் என்று அறிவித்தார்கள்.முகின் ராவ் மலேசியாவை சேர்ந்தவர். இவர் மலேசியா தமிழ் அல்லது மலேயாத் தமிழ் என்றழைக்கப்படும் மொழியில் பேசப்படுவார்.முகின் பிறந்தது , வளர்ந்தது,படித்தது எல்லாமே மலேசியாவில் தான். இவர் பாடகர், நடிகர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார். இவருடைய பாடல்கள் எல்லாம் ஆல்பங்கள் வடிவில் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.

-விளம்பரம்-
mugen

அது மட்டும் இல்லைங்க இவருடைய பாட்டு எல்லாமே வேற லெவல் என்று கூட சொல்லலாம்.அந்த அளவிற்கு யூடூப்பில் ஹிட்டாக உள்ளது.இதனால் முகினுக்கு தமிழில் விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், சிறப்பாகவும் விளையாடி வந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் கான மகுடத்தை சூடி உள்ளார். அதோடு மட்டும் இல்லைங்க மலேசியா மக்களோடு தமிழக மக்களின் மனதிலும் அதிக இடமும் பிடித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து நேற்று அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டது.மேலும், அதற்கான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ்ஸிற்கு பின் முகென் ராவ் வெளியிட்ட முதல் வீடியோ.! உருக்கமான பேச்சு.!

- Advertisement -

தென்னிந்திய தமிழ் சினிமா உலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் இளைய தளபதி விஜய்.மேலும்,அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள ‘பிகில்’ படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவரின் நடிப்பில் ” தளபதி 64″என்ற படம் தயாராக போகிறது என்ற தகவல் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மாநகரம் படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார்.மேலும், முகின் “தளபதி 64” என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்று ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி 64 படத்தில் முகின் நடிக்க ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார் இயக்குனர். முகினுக்கு பம்பர் ஆஃபர் போங்க பிக்பாஸ் டைட்டில் வின்னர் கிடைச்சவுடனே மாஸ் ஹீரோ தளபதி விஜய் அவர்களுடன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.முகின் வேற லெவல்ல தெறிக்கவிடறாரு கூட சொல்லலாம். இதனை தொடர்ந்து முகினுக்கு இணையங்களில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.மேலும், அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அவர் அறிவித்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக தமிழ் சினிமா திரையுலகில் மாஸ் காட்டும் ஹீரோ விஜய் சேதுபதி தான் நடிக்கிறார் என்ற தகவல் வெளியே வந்தவுடன் ரசிகர்களிடையே அதிக வரவேற்பும், ஆர்ப்பாட்டத்தையும் ஏற்படுத்துகிறது.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு,சஞ்சீவ்,ஸ்ரீமன்,ஸ்ரீநாத் என பல நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்றும் அறிவித்தார்கள்.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.மேலும், ரசிகர்கள் “தளபதி 64” என்ற ஹேஷ்டேக் உருவாக்கி படம் குறித்த தகவல்களை பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

Advertisement