முகெனின் சத்தியமா பாடலை கிட்டார் வாசித்தபடி பாடிய விஜய் டிவி பாவனா.!

0
2569
mugen
- Advertisement -

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி சிறப்பாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் தமிழக மக்களின் அனைவர் மனதிலும் இடம் பிடித்து பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னராக முடி சூட்டினார் முகென். முகென் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் அவர் கடந்து வந்த பாதையைப் பற்றி பார்க்கலாம். முகென் ராவ் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் இடத்தில் பிறந்தார். இவருக்கு எம்.ஜி.ஆர். என்ற மற்றொரு பெயரும் உண்டு. முகென் அப்பா பெயர் பிரகாஷ் ராவ் கிருஷ்ணன். இவர் ஒரு பாடகர். அம்மா பெயர் நிர்மலாதேவி, இவங்க மலேசியாவில் இருக்கிற கம்பெனியில வேலை பார்க்கிறார்கள்.முகெனுக்கு விக்னேஷ் ராவ் என்ற சகோதரனும்,ஜனனி என்ற சகோதரியும் உள்ளார்கள். முகென் தன்னுடைய பள்ளிப்படிப்பை கோலாலம்பூரில் முடித்தார்,மலேசியாவில் உள்ள கல்லூரியில் டிப்ளமோவை முடித்தார்.

-விளம்பரம்-

முகெனுக்கு தன்னுடைய இளம் பருவத்தில் அப்பா மேடையில் பாடும்போது வரும் கைத்தட்டல் மீது ஆசைப்பட்டு தானும் பெரிய பாடகராக வேண்டும் என்று ஆசை பட்டாராம் . மேலும், நமக்கும் இந்த மாதிரி கைதட்டல் வேண்டும் என்று ஆசை வளர்த்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.அதற்காக முதலில் தன் அப்பாவுடன் சேர்ந்து பாட்டு பாட தொடங்கினார். பின்னர் தன் பள்ளி நண்பர்கள் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து பாட்டு பாடத் தொடங்கினார்.பின்னர் அவரே எழுதி பாடல்களை பாடத் தொடங்கினர்.அப்படி பாடிய பாடல்களில் ஒன்றான கயல்விழி என்ற பாடல் பெரிய அளவு ஹிட்டாச்சி. அது மட்டும் இல்லைங்க யூடியூப்களில் செம ட்ரெண்டிங் ஆச்சி.இந்த பாடல் மூலம் தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். இவர் பாடகர் மட்டும் இல்லைங்க தன்னுடைய 13 ஆம் வயதிலேயே மலாய் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : அந்த சிலை அருகில் இருந்து புகைப்படம் எடுக்க வேண்டும்.! முகெனுக்கு இப்படி ஒரு ஆசையா.!

- Advertisement -

அதைத் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் ஷார்ட் பிலிம்களில் கூட நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து கிட்கட் ,கேஎஃப்சி போன்ற விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.மேலும்,முகினுக்கு 2011ஆம் ஆண்டு பெஸ்ட் ஆக்டர் என்ற விருது வழங்கினார்கள்.மேலும், “கயல்விழி, அன்பே ஆருயிரே, வெறிச்சோடி, காதலி ,கண்ணே, அபிநயா, போகிறேன்” போன்ற பல பாடல்களை எழுதி யூடியூப்களில் தெறிக்க விட்டு இருக்காருன்னு சொல்லலாம். இந்த பாடல்களில் அவருடைய பேவரட் பாட்டுன்னு சொன்னா ‘கயல்விழி மற்றும் போகிறேன்’ என்ற பாடல்தான் என்று சொல்லியிருக்கிறார். இவருடைய மிகப் பெரிய ஆசை என்னவென்று பார்த்தால் ஒரு மிகப் பிரபலமான அருங்காட்சியத்தில் எனக்கு ஒரு மெழுகு சிலை வைக்க வேண்டும். அது பக்கத்தில் நின்று நான் போட்டோ எடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை, கனவு என்று கூறினார்.முகின் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் பல திறமைகளை கொண்டுள்ளவர்.

This image has an empty alt attribute; its file name is image-61.png

இதனை தொடர்ந்து முகினுக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.மேலும், தன்னுடைய திறமையாலும் நம்பிக்கையாலும் பிக் பாஸில் சிறப்பாக விளையாடி வந்தார்.மேலும், பிக் பாஸ் வீட்டில் முகின் பாடிய பாடல் செம்ம ஹிட்டாகி உள்ளது. ” நீதான் நீதான்” என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.ரசிகர்கள் பாடல் வெறித்தனமாக இருக்கு என்று இணையங்களில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.மேலும், இந்தப் பாடலை சூப்பர் சிங்கரில் பிரபலமான சௌந்தர்யா, பிரியங்கா அவர்கள் எல்லோரும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று முகினுடன் சேர்ந்து பாடினார்கள்.

-விளம்பரம்-

அந்த பாடலை பிரபல ஊடகம் நடத்திய விருது வழங்கும் விழாவில் நேரடியாக சௌந்தர்யா பாடினார். இந்த நிகழ்ச்சியில் ஏ ஆர் ரகுமான், அனிருத்,ஹிமான் இவர்களும் கலந்துள்ளனர். மேலும் இந்த பாடலை கேட்டு மகிழ்ந்தார்கள். கூடிய விரைவில் முகினை இசையமைப்பாளர்கள் கண்டு கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி அனைவரயும் ஈர்த்த சத்தியமா பாடல் விஜய் டிவி தொல்குப்பாளினியான பாவனாவையும் கவர்ந்துள்ளது. சமீபத்தில் பாவனா ‘சத்தியமா’ பாடலுக்கு கிட்டார் இசைத்து பாடி அந்த வீடியோ வை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement