இவர் மட்டும் பிக் பாஸ் டைட்டிலை வென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாறாக அமையும்.!

0
13407
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 7 போட்டியாளர்கள் மீதமுள்ள நிலையில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேற இருக்கிறார். மேலும், இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்கில் முகென் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.

-விளம்பரம்-

ஒருவேளை முகென் இந்த சீசனின் வெற்றியாளராக வந்து விட்டால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு புதிய வரலாறாக அமையும். பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டும் இரண்டு சீசனை நிறைவு செய்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் பட்டத்தை வென்றனர்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலை பங்கமாக கலாய்த்த கமலுடன் நடித்த நடிகர்.!

- Advertisement -

அதே போல முதல் சீசனில் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் சினேகன் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். மேலும், இரண்டாவது சீசனில் ஜனனி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக நுழைந்தார். ஆனால், இவர்கள் இருவருமே பட்டத்தை வெல்லவில்லை.

எனவே, இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெரும் போட்டியாரல்கள் பிக் பாஸ் பட்டத்தை வெல்ல மாட்டார்கள் என்ற ஒரு நினைப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் முகென் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். எனவே, முகென் பட்டத்தை வெல்வாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

முதல் சீசனில் சினேகன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற போதும் அவருக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்திருந்தது. ஆனால், அந்த சமயத்தில் சினேகனுக்கு தான் முதல் இடம் கிடைத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சும் நிலவியது. எனவே, இந்த சீசனில், முகென் வெற்றி பெற்றால் இதுவரை கோல்டன் டிக்கெட்டை வென்ற போட்டியாளர் பட்டத்தை வென்றது இல்லை என்ற விஷயத்தை உடைத்து பிக் பாஸ் சீசனில் ஒரு வரலாறாக அமையும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement