விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மற்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மூன்று சீசன்களை கடந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்களாக உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்கி வந்தார். மேலும், தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தெலுகு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், இந்தி பிக் பாஸை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கானை அடுத்து மூன்று சீசனை தொடர்ந்து வழங்கி வருவது கமல் மட்டும் தான். இந்த பிக் பாஸ் மேடையை கமல், தனது அரசியல் களத்திற்காகவும் பயனப்டுத்திக்கொண்டுள்ளார்.
இதையும் பாருங்க : ட்விட்டரில் தளபதியின் பிகிலை முந்திச் செல்லும் பிக்பாஸ் கவின்.! காரணம் இது தான்.!
இந்த நிலையில் கமலை கலாய்த்து கமலுடன் பல்வேறு படங்களில் நடித்த எஸ் வி சேகர் கமலை கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார். அதில், இன்றய பெரிய முதலாளி (BIG BOSS) ஆரம்பமே அதிர்ச்சி. தமிழ்ப்படம்னு போய் உக்காந்தா முதல் 5 நிமிஷம் இங்கிலீஷ் சப் டைட்டில்கூட இல்லாத இந்திப்படம் பாத்த பீலிங். கேட்டா அது அரசியலாம் என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் இதுகுறித்து கேட்கப்படுகையில், கமல் நிகழ்ச்சியில் அடிக்கடி அரசியல் பத்தி பேசி வருகிறார் அதை கிண்டல் செய்யும் வகையில் இதை பதிவிட்டிருந்தேன் என்று கூறியுள்ளார். இதனால் கமல் ரசிகர்கள் எஸ் வி சேகரை வறுத்தெடுத்து வருகின்றனர்.