மலேசியாவில் முகெனை வரவேற்க வந்த காரை பாத்தீங்கன்னா அசந்துடுவீங்க.. செம மாஸ்..

0
7256
mugen
- Advertisement -

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி சிறப்பாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் தமிழக மக்களின் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ்.மேலும், தன்னுடைய திறமையாலும் நம்பிக்கையாலும் பிக் பாஸில் சிறப்பாக விளையாடி வந்தார்.மேலும்,பிக் பாஸ் சீசன் 3- ன் டைட்டில் வின்னரும் ஆவார்.இது மட்டும் இல்லைங்க முகென் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் பல திறமைகளை கொண்டுள்ளவர்.மலேசியாவின் பாப் பாடகர் முகென் ராவ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் இந்திய மக்கள் ,மலேசியா மக்கள் என அனைவரின் ஆதரவையும் அன்பையும் பெற்று, அதிக வாக்குகளோடு டைட்டில் வின்னர் ஆனார்.

-விளம்பரம்-

இதோடு அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் மற்ற போட்டியாளர்களை சந்தித்து மகிழ்ந்து வந்திருந்தார். ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் சமமாக தான் விளையாடி வந்து கொண்டிருந்தார். மேலும்,அவர் எந்த ஒரு பெரிய பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளவில்லை. அபிராமி பிரச்சினையைத் தவிர. அது அபிராமியை கிளம்பியது என்று கூட சொல்லலாம். மேலும், இந்த வெற்றியினை இந்தியாவில் கொண்டாடி முடித்து விட்டு முகென் நேற்று தனது சொந்த நாடான மலேசியாவிற்கு சென்றார். தற்போது முகென் வரவை கண்டு மலேசிய மக்கள் உற்சாகத்திலும்,ஆனந்தத்திலும் உள்ளார்கள். விமான நிலையத்திலுருந்தே முகெனை பார்த்து ரசிகர்கள் வாழ்த்தியும், பாராட்டியும் வருகிறார்கள்.

இதையும் பாருங்க : யோகா மாஸ்டருடன் அந்தரத்தில் பிரியா கொடுத்த யோகா போஸ்..கேலிகளை தவிர்க்க செய்த வேலையை பாருங்க..

- Advertisement -

மேலும், முகென் போஸ்டர் போட்ட கார் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்கள். மேலும், அந்த காரில் வி ஆர் தி பாய்ஸ் என்ற வசனமும் எழுதப்பட்டிருந்தது. மேலும், இந்த கார் விமான நிலையத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்தது. மலேசிய மக்கள் கொடுத்த அன்பும், ஆதரவும் முகெனுக்கு மூச்சு திணற வைத்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் சுற்றியது. அதில் சிறுமி ஒருவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது முகின் பாடிய “நீதான் நீதான்” என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். டைட்டில் வின்னர் ஆன சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் அவருடைய பாடல்தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமானது .இதனைத்தொடர்ந்து முகென் மலேசியா மக்களுடன் பேசிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

மேலும்,இந்திய ரசிகர்கள் முகென் மீண்டும் இந்தியா வரமாட்டாரா என்று கவலையில் உள்ளார்கள்.உண்மைய சொன்னால் முகென் மீண்டும் இந்தியாவுக்கு வருவார்.ஏன்னா பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்று அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே முகென், நம்ப தளபதி விஜய் அவர்களின் “தளபதி 64″ படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என இயக்குனர் கூறியிருந்தார்.அதனால கண்டிப்பா முகென் திருப்பியும் வருவார். மேலும், பிக் பாஸ் வீட்டில் முகின் பாடிய பாடல் செம்ம ஹிட்டாகி உள்ளது. ” நீதான் நீதான்” என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.ரசிகர்கள் பாடல் வெறித்தனமாக இருக்கு என்று இணையங்களில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.அதுமட்டும் இல்லைங்க பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் ஆனவுடன் விஜய் நடிப்பில் “தளபதி 64” படத்தில் முகினுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது . இதனை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான், அனிருத், இமான் ஆகியோர் தலைமையில் பாடவும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement