தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதியினர் இருந்தாலும். அதில் ஒரு சில தம்பதியினர் மட்டுமே அடிக்கடி ரசிகர்களின் டாக்காக மாறிவிடுகின்றனர். அந்த வகையில் அட்லீ மற்றும் ப்ரியா இருவரும் அடிக்கடி ரசிகர்களால் பேசப்பட்டு வரும் தம்பதியனராக மாறி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே அட்லீ மற்றும் பிரியா இருவருக்கும் இருக்கும் நிற வேறு பாடு தான். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அட்லி. இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது.
அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இதுவரை அட்லீ கதைகளை திருடுவபவர் என்று விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் தற்போது அட்லியின் மனைவி பிரியா சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. அட்லீயின் மனைவியான ப்ரியா, கல்லூரி படிக்கும் காலத்தின் போதே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது மிகவும் ஆர்வம் கொண்டார் இதனால் கல்லூரியில் நடத்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார் பிரியா.
இதையும் பாருங்க : சேரன் பேசியதை கேட்ட பார்த்திபன்..பார்த்திபனிடம் ட்விட்டரில் பகிரங்க மன்னிப்பு கேட்ட சேரன்..
அதன் பின்னர் ஒரு சில குறும் படங்களில் நடித்த பிரியா அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் பிரியா. அதன் பின்னர் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் பிரியா சூர்யா மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் பிரியா.
இருப்பினும் அட்லீயுடன் அடிக்கடி பட பூஜைகள், பட விழாக்கள் என்று தவறாமல் சென்று வருகிறார் பிரியா. எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா அட்லீ, ஷாப்பிங் சென்றாலும், சுற்றுலா சென்றாலும், விழாக்களுக்கு சென்றாலும் அதனை உடனே புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். மேலும், தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட பிரியா, தனது நேரங்களை உடற்பயிற்சி செய்வதிலும், யோகிசனம் செய்வதிலும் செலவழித்து வருகிறார். இவருக்கென்று சமூக வலைதளத்தில் தனிப்பட்ட ரசிகர்களும் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரியா சமீபத்தில் தனது யோகா ஆசிரியருடன் யோகா சனம் செய்த புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்தாலும் படத்தின் கீழ் சொற்பமான கமெண்ட்ஸ்கள் மட்டும் தான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே ரசிகர்கள் யாரும் கிண்டல் செய்ய கூடாது என்பதற்காக குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கமன்ட் செய்யும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பத்திரபடுத்தி வைத்துள்ளார் பிரியா. ஏற்கனவே, பிரியா மற்றும் அட்லீயை நிறத்தை வைத்து பலரும் கேவலமாக கிண்டல் செய்து வந்தார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அட்லீ நெற்றியடி கொடுத்தார் என்பதும் குறிப்பித்தக்கது.