தாட் பூட்னு பிக் பாஸில் இருக்கும் முகென் சின்ன வயசுல எப்படி பவ்வியமாக இருக்கார் பாருங்க.!

0
7407
mugen

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் முகென், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் அடக்கம். இதில் முகென் ராவ் தமிழ் ரசிகர்கள் சிலருக்கு தெரியவும் வாய்ப்பு இருகிறது.

மலேசியாவை சேர்ந்த இவர், ஒரு ஹிப் ஹாப் பாடகராவார். இதுவரை மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இவருக்கென்று மலேசியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் தமிழிலும் ஒரு ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : என்னுடைய ஒட்டு இவருக்கு தான்.! ஓப்பனாக கூறிய சாக்க்ஷி.! 

- Advertisement -

அதே போல இவரது ஒரு சில ஆல்பம் பாடல்கள் இந்தியாவிலும் கொஞ்சம் பிரபலம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் இவருக்கு மலேசியாவில் இருந்து பல்வேறு ஆதரவுகள் குவிந்து வருகிறது. இவருக்கென்று மலேசிய மக்கள் பல்வேறு ஆர்மியை கூட சமூக வலைத்தளங்களில் துவங்கி இருக்கின்றனர்.

இருப்பினும் தமிழ் ரசிகர்ளுக்கு இவரை பற்றி அவ்வளவாக அறிய வாய்ப்புகள் குறைவு தான். அதிலும் கடந்த சில நாட்களாக இவர் அபிராமி விஷயத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் முகென் சிறு வயதில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement