ஒரு கணவர்னா இப்படி இருக்கனும் – பிரியங்காவே பொறாமை பட்ட நாதியாவின் கணவர் இவர் தானா.

0
4493
nadhiya
- Advertisement -

விஜய் டிவியில் அக்டோபர் 3 ஆம் தேதி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த முறை 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே கலந்துகொண்டு இருந்தனர். தற்போது இந்த நிகழ்ச்சி 11 நாட்களை கடந்துள்ளது. மேலும், முதல் இரண்டு நாட்கள் சிரிப்பும், பாசமழை பொழிந்து கொண்டிருந்த பிக்பாஸில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக புகைய தொடங்கியுள்ளது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் நதியா சாங்கும் ஒருவர். நதியா சாங் யூடியூப் மூலம் பிரபலமானவர். இவர் மலேசியாவை சேர்ந்தவர். இவர் பிரபலமான மாடலும் ஆவார். மேலும், இவர் 2015 ஆம் ஆண்டில் எம்ஐஎம் டாப் மாடல் தேடலில் பங்கேற்று ரன்னர் ஆக வந்தார். இதனை தொடர்ந்து இவர் திருமதி மலேசியா உலக 2016 இல் பங்கேற்றார்.இதில் நதியா சாங் இறுதிப்போட்டி வரை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

நேற்றய கடந்து வந்த பாதை டாஸ்கில் பேசிய நாதியா, சிறு வயது முதலே தன் அம்மாவால் போலீசில் அடி கூட வாங்கி இருக்கிறேன். ஆனால், என் கணவர் வந்த பின்னர் தான் என் வாழ்க்கையில் சந்தோசம் வந்தது என்று கூட கூறி இருந்தார். இவர் தனது கணவர் பற்றி சொன்னதை கேட்டு ப்ரியங்காவே, எல்லா பெண்களுக்கு இப்படி கணவர் கிடைத்தால் நிச்சயம் சாதிப்பார்கள் என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் நதியா சாங்கின் கணவர் மற்றும் மூன்று மகள்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே நாதியா தான் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார். மேலும், இவர் இந்த வாரம் நாமினேஷனிலும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement