அட கன்றாவியே. நமிதாதானா இது – இப்படி ஒரு கோலத்த பாத்திருக்கீங்களா ?

0
13412
namitha
- Advertisement -

‘மச்சான்’ என்ற ஒரு வார்த்தையின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமீதா. நமீதா அவர்கள் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறனை காட்டியுள்ளார். இவர் பெரிதும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் தான் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் சினிமா திரை உலகிற்கு தெலுங்கு மொழியில் காதல் திரைப்படமான ‘சொந்தம்’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின்னர் தமிழில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து ‘மாயா’ என்ற ஆங்கிலப் படத்திலும் நமீதா நடித்துள்ளார்.பம்பரக் கண்ணாலே, அழகிய தமிழ் மகன், பில்லா, ஜெகன்மோகினி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். சினிமா உலகில் வந்த காலகட்டத்தில் நமிதாவுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. பின்னர் ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

- Advertisement -

அதனால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். அது கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டார் நமிதா.

திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார் நமீதா. திருமணத்திற்கு பின்னர் பரத்துடன் ‘பொட்டு’ என்ற படத்தில் நடித்திருந்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நமீதா அகோரி கெட்டப்பில் நடித்திருந்தார். இந்த படத்தின் போது எடுத்த சில புகைப்படங்கள் தற்போது வைரலாக வருகிறது.

-விளம்பரம்-
Advertisement