இந்த கொரோனவினால் உலக மக்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து கொண்டே செல்வதால் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 1121 பேர் பாதிக்கப்பட்டும், 29 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள்,மளிகைக்கடை, போக்குவரத்துகள்,பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. கொரோனவினால் தற்போது நாட்டில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் உணவுக்காக கஷ்டப்பட்டு வருகின்றனர்.

Advertisement

இந்த ஊரடங்கு உத்தரவினால் பல இடங்களில் மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். மக்கள் மட்டுமில்லாமல் வாய் இல்லாத பிராணிகளும் உணவுக்காக ஏங்கித் தவிக்கிறார்கள். இந்நிலையில் நடிகை நமீதா அவர்கள் நள்ளிரவில் பைக்கில் சென்று நாய்களுக்கு உணவு வைத்துள்ளார்.

தற்போது இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் தனது வீட்டுக்கு வெளியில் இருக்கும் 40 தெரு நாய்களுக்கு நள்ளிரவில் பைக்கில் உணவு அளித்து உள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தெருவில் இருக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு கொஞ்சம் உணவும், தண்ணீரும் அனைவரும் வீட்டுக்கு வெளியில் வைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்து உள்ளார்.

Advertisement

Advertisement

நமீதாவின் இந்த உதவியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நமிதா. தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு நடிகை நமீதா அவர்கள் சரத் குமார், சத்தியராஜ், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து உள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். தற்போது நடிகை நமீதா அவர்கள் சில படங்களில் கமிட் ஆகி உள்ளார்.

Advertisement