ஒரு வித்யாசமான Feelingஆ இருக்கு, நிரூப்பிடம் போனில் பேசிய விஷயத்தை ஊருக்கே சொன்ன அனிதா.

0
620
Niroop
- Advertisement -

ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை நிறைவடைந்தது. 16 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 12 பேர் வெளியேற்றப்பட்டு இறுதி வாரத்தில் பாலாஜி, நிரூப், தாமரை, ரம்யா ஆகிய 4 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இப்படி ஒரு நிலையில் 35 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் பிக் பாஸ் அல்டிமேட் பட்டத்தை வென்றார் பாலாஜி முருகதாஸ். இரண்டாம் இடத்தை நிரூப்பும், மூன்றாம் இடத்தை ரம்யா பாண்டியனும் பிடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-
Image

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதாவின் பெயர் தான் தொடர்ந்து டேமேஜ் ஆகிவந்தது . 4ஆம் சீசனில் பெண்கள் சுதந்திரத்தை பற்றி எல்லாம் பேசி கைதட்டல் வாங்கினார் அனிதா. அதே பாணியை இந்த சீசனிலும் கடைபிடித்து வந்தாலும் அது அவருக்கே வினையாக முடிந்துவிட்டது. தான் விளையாடுவதை விட்டுவிட்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று தான் அனிதா அதிகம் யோசித்து கொண்டு வந்தார்.

இதையும் பாருங்க : அந்த விருத வேணாம்ணா சொன்னாரா? ஏ ஆர் ரகுமானை விமர்சித்து பேசிய நடிகை காயத்ரி – வைரலாகும் வீடியோ இதோ.

- Advertisement -

பெயரை டேமேஜ் செய்துகொண்ட அனிதா :

அதே போல 4ஆம் சீசனில் இவர் சுமங்கலி பஞ்சாயத்து குறித்து பேசி கமலிடமே கைதட்டலை வாங்கினார். ஆனால், இந்த சீசனில் இருந்த அனிதாவே வேறு. இந்த சீசனில் அனிதா பல முறை டபுள் மீனிங்கில் பேசி சர்ச்சையில் சிக்கிவந்தார். அதிலும் ஒரு எபிசோடில் நிரூபுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது சூ*** வைப்பாங்க என்று அனிதா பேசியது meme templateஆகவே மாறியது என்று தான் சொல்ல வேண்டும்.

Image

நிரூப் – அனிதா :

அதே போல இந்த சீசனில் நிரூபிடம் தான் அனிதா சம்பத் அதிக நேரத்தை செலவழித்து வந்தார். கடந்த சீசனில் பங்கேற்ற நிரூப், தன் மீது பாசத்தை பொழிந்த பிரியங்காவையே பல முறை திட்டி தீர்த்து இருந்தார். ஆனால், இந்த சீசனில் அனிதா சம்பத்தின் கைப்பிள்ளையாகவே மாறினார் நிரூப். சொல்லப்போனால் நிரூப் சரியாக கேம் விளையாடாததுக்கு அனிதா சம்பத்தும் ஒரு காரணம் தான்.

-விளம்பரம்-

நிரூப் செய்துள்ள போன் கால் :

இறுதி வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் முன்னாள் போட்டியாளர்கள் எல்லாம் சென்ற போது பிரியங்காவும் சென்று இருந்தார். அப்போது கூட பிரியங்கா, நிரூப்பிடம் நெருக்கம் காட்டும் போதெல்லாம் அனிதா சம்பத்தின் முகமே மாறியது. நிரூப்- அனிதா உறவை பலர் அக்கா தம்பி உருவாக பார்த்தாலும் பலர் இதை வேறு விதமாகவே பார்த்தனர் என்பது தான் உண்மை. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத்திற்கு நிரூப் கால் செய்து இருக்கிறார்.

ரசிகர்கள் கேட்ட கேள்வி :

நிரூப் கால் செய்த விஷயத்தை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் அனிதா. மேலும், அதில் 70 நாள் நட்பு, ஆனா இப்போ தான் முதல் முறை கால் வருது. முதல் முறையா போன்ல பேசுறோம் இது வித்யாசமான பீலிங்கா இருக்கு’ என்று பதிவிட்டுள்ளார். இதை கண்ட சிலர், ‘நீங்க தான் லவ்லா செட் பண்ணி விடுறீங்க அப்படியே நம்பரும் போடுங்க ‘ என்று கேட்க அதற்கு அனிதா ‘அது வில்லேஜ் டாஸ்க்ல எனக்கு கொடுத்த டாஸ்க்’ என்று கூறியுள்ளார்.

Advertisement