அந்த விருத வேணாம்ணா சொன்னாரா? ஏ ஆர் ரகுமானை விமர்சித்து பேசிய நடிகை காயத்ரி – வைரலாகும் வீடியோ இதோ.

0
664
ar
- Advertisement -

நடிகை காயத்ரி ரகுராம் அவர்கள் இந்தி பாடலுக்காக ஏ ஆர் ரகுமான் வாங்கிய ஆஸ்கர் விருதை குறித்து விமர்சித்து பேசி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர். மேலும், உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-180-743x1024.jpg

தன்னுடைய தமிழன் என்ற அடையாளத்தை எங்கேயும் விட்டுக்கொடுக்காதவர். பல மேடைகளில் தமிழுக்காக இவர் குரல் கொடுத்திருக்கிறார். அதோடு தமிழ் தெரியாத இடங்களிலும் இவர் தன் தாய்மொழி தமிழில் பேசி இருக்கிறார். முக்கியமாக தமிழர் பிரச்சனை பலவற்றில் ஏ. ஆர். ரகுமான் குரல் கொடுத்திருக்கிறார். அதோடு வட இந்தியா விருது வழங்கும் விழாக்கள் பலவற்றில் ஏ ஆர் ரகுமான் தமிழில் தான் பேசி இருக்கிறார். மேலும், தன்னிடம் வேண்டும் என்று ஹிந்தியில் கிண்டலாக பேசும் நபர்களிடம் பதிலுக்கு தமிழில் பேசி பதிலடி கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -

உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது:

அதே போல் தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னுடைய ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கும் கருத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் போட்டுள்ள பதிவு பெரும் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் உள்துறை ஹிந்தியில் மட்டுமே நடைபெறுவதாகவும்,

ஏ.ஆர்.ரகுமான் பதிலடி:

அனைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொதுமொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழி ஒன்று இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாமல் திரை பிரபலங்கள் பலரும் இந்த இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வகையில் இந்திய தொழில் கூட்டமைப்பின், தென் மண்டல பிரிவால் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ஏ.ஆர்.ரகுமான் பேசி இருந்தார். பின் இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு புறப்பட்ட போது அவரை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை ஏற்றுகொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளாரே? என்று கேள்வி எழுப்பினார்.

-விளம்பரம்-

ஏ.ஆர்.ரகுமானை விமர்சித்த நடிகை காயத்ரி:

அதற்கு ஏ.ஆர். ரகுமான், தமிழ் தான் இணைப்பு மொழி என்று ஒற்றை வரியில் பதிலளித்தார். இப்படி ஏ ஆர் ரகுமான் பதிவிட்ட கருத்து சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், நான் ஏ ஆர் ரகுமான் கூறுவதை முழுமையாக ஆதரிக்கிறேன். அவர் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பெருமையாக எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறினார்.

கண்டனங்களை தெரிவிக்கும் ரசிகர்கள்:

அதேபோல் இனிமேல் இந்தி படங்களுக்கு பாடல் பாடும் போதும் அதை தமிழில் பாட வேண்டும். அதன் மூலம் இந்தி மக்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்வார்கள். அதுதானே இணைப்பின் தொடக்கம். ஜெய்ஹோ என்ற ஹிந்தி பாடலுக்கு ரகுமான் ஆஸ்கர் விருதை வென்றார். அப்போது நான் இந்த பாடலை தமிழில் பாடவில்லை என்பதால் எனக்கு இந்த விருது தேவை இல்லை என்று கூறினாரா? ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யக் கூடாது. நாமும் அதை செய்ய வேண்டும் என்று ஏ ஆர் ரகுமானை விமர்சித்து காயத்ரி ரகுராம் பேசினார். இப்படி காயத்ரி கூறிய கருத்துக்கு ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement