முடியை வெட்டி ஆளே மாறிய நிரூப் – யாஷிகாவிற்காகவா ? இல்ல பைனல்ஸ் போய்ட்டோம்னா ? அப்போ அது பொய்யா ?

0
802
niroop
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இன்னும் ஒரு வாரத்தில் பிக் பாஸ் பட்டத்தை தட்டி செல்பவர் யார் என்று தெரிந்து விடும். தற்போது பாவனி, பிரியங்கா, அமீர், ராஜ், நிரூப் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். 18 பேருடன் துவங்கிய இந்த நிகழ்ச்சி பின்னர் 2 வைல்டு கார்டு என்ட்ரியுடன் 20 பேர் கொண்ட நிகழ்ச்சியாக மாறியது. மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முகம் தெரியாத நபர்கள் தான் அதிகம் இருந்தார்கள்.

-விளம்பரம்-

அதில் நிரூப்பும் ஒருவர். ஆரம்பத்தில் நிரூப் மிகவும் சவாலான போட்டியாளராக தான் இருந்தார். ஆனால் கடைசி 4 வாரங்களில் இவரது பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. அதிலும் குறிப்பாக இவர் பிரியாங்காவை டார்கட் செய்து அடிக்கடி சண்டையிட்டு வந்தது இவரது பெயருக்கு மிகப்பெரிய பாதகமாக அமைந்தது. இருப்பினும் எப்படியாவது இறுதி போட்டி வரை வந்துவிட வேண்டும் என்று எண்ணினார்.ஆனால், Ticket To finale டாஸ்க்கில் இவரை முதல் சுற்றிலேயே வெளியில் அமர்த்திவிட்டனர்.

- Advertisement -

நேரடியாக இறுதி போட்டிக்கு சென்ற நிரூப் :

இந்த நிலையில் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக போட்டியாளர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பொறியாளரை நேரடியாக இறுதி வாரத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்று கூறப்பட்டது. இதில் ஆரம்பத்தில் பாவனியை அனைவரும் முடிவு செய்தனர். ஆனால், அதற்கு போட்டியாளர்கள் சொன்ன காரணம் ஏற்க முடியவில்லை என்று பிக் பாஸ் அதனை மறுத்துவிட்டார். பின்னர் பல மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் நிரூப்பை பைனலுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், தாமரையை தவிர மற்ற யாரும் நிரூப்பை மனதார பைனலுக்கு அனுப்பி வைக்கவில்லை.

அபிநய்யிடம் சன்டை போட்ட நிரூப் :

இதன் மூலம் நிரூப் இறுதி போட்டிக்கு செல்லும் இரண்டாம் போட்டியாளரானார். மேலும், இறுதி போட்டிக்கு செல்ல நிரூப் தன்னை மிகவும் தாழ்த்தி கொண்டு அடிமட்டம் வரை போனது பலருக்கும் பிடிக்கவில்லை.இருப்பினும் எப்படியோ இறுதி போட்டிக்கு சென்றுவிட்டோம் என்று சந்தோஷமாக தான் இருந்தார். அதே போல கடந்த வாரம் நிரூப் தான் வெளியேற அதிக வாய்ப்பும் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே நிரூப் நீளமான முடியுடன் தான் இருந்து வந்தார். மேலும், ஒரு டாஸ்கின் போது கூட அபிநய் இவரது முடியை கொஞ்சம் வெட்ட வைத்தார்.

-விளம்பரம்-

கேன்சர் நோயாளிகளுக்கு தானம்னு சொன்னது ?

இதனால் கடுப்பான நிரூப், நான் இந்த முடியை கேன்சர் நோயாளிகளுக்கு தானமாக கொடுக்க வளர்த்து வருகிறேன் என்று அவரிடம் சண்டை போட்டார். அதே போல கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் முன்னாள் போட்டியாளரும், இவரின் முன்னாள் காதலியுமான யாஷிகா வந்த போது கூட முடியை வெட்டு, இது நல்லாவே இல்லை என்று போகும் போது கூறிவிட்டு தான் சென்றார். ஆனால், அப்போதும் நிரூப் முடியை வெட்டவில்லை. இப்படி ஒரு நிலையில் நிரூப் தன் முடியை வெட்டி கொண்டு இருக்கிறார்.

ரசிகர்களின் கேள்வி :

இறுதி போட்டிக்காகவா ? யாஷிகாவிற்காகவா ?

இதை பார்த்த பலர் இப்போ தான் அழகா இருக்கார் என்று சொன்னாலும் பெரும்பாலானோர். முடியை கேன்சர் நோயாளிகளுக்கு தானமாக கொடுக்க வளர்த்து வருவதாக தானே சொன்னார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஒரு சிலரோ, நிரூப் வெட்டிய முடியை கேன்சர் நோயாளிகள் அமைப்பிற்கு அனுப்பப்பட்டு விட்டுருக்கும் என்றும் கூறி வருகின்றனர். உண்மையில் யாஷிகா சொன்னதற்காக வெட்டினாரா ? இல்லை இறுதி போட்டிக்கு சென்றுவிட்டோம் என்று வெட்டிவிட்டாரா என்பது இன்றைய நிகழ்ச்சியில் நிரூப் சொன்னால் தான் தெரியும்.

Advertisement